மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது

கிரீஸ் பிரதமர் சிப்ரஸ் மற்றும் மாசிடோனியா பிரதமர் சோரன் ஜேவ்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

கிரீஸ் பிரதமர் சிப்ரஸ் மற்றும் மாசிடோனியா பிரதமர் சோரன் ஜேவ்

மாசிடோனியா பெயர் தொடர்பாக பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர கிரீஸும், மாசிடோனியாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி கிரீஸின் பக்கத்து நாடான , மாசிடோனியா இனி, வடக்கு , மாசிடோனியா என அழைக்கப்படும்.

நமது மக்களுக்கு தேவையான ஒரு வரலாற்று நடவடிக்கை இது என கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் கூறியுள்ளார்.

முன்னாள் யூகோஸ்லாவியாவை உடைத்தது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது.

கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும், மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ் கூறிவந்தது.

கிரீஸ் பிரதமர் சிப்ரஸ் மற்றும் மாசிடோனியா பிரதமர் சோரன் ஜேவ் முன்னிலையில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கிட்டத்தட்ட 30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீஸின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றப்பட உள்ளது என பிபிசி செய்தியாளர் டி லான்னி கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP

இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு நாடுகளின் நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்க வேண்டும். அத்துடன் மாசிடோனியாவின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் ஒப்புதல் வழங்க வேண்டும்.

தங்களின் அடையாளத்தை இந்த ஒப்பந்தம் அழித்துவிட்டதாக இருநாடுகளின் தேசியவாதிகளும் கூறுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைச் சந்தித்தது.

இந்த ஒப்பந்தத்தின் படி, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா என அறியப்படும் இந்நாடு, வடக்கு மாசிடோனியா குடியரசு என அழைக்கப்படும்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பில் மாசிடோனியா சேருவதற்கான எதிர்ப்பை கிரீஸ் கைவிடும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

முதலில் மாசிடோனியா நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். பிறகு இது தொடர்பாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :