உலகப் பார்வை: இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர்

  • 19 ஜூன் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் முன்னாள் அமைச்சர்

படத்தின் காப்புரிமை Reuters

தனது பரம எதிரியான இரானுக்கு உளவுப் பார்த்ததாக தனது நாட்டின் முன்னாள் அமைச்சரை இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் குற்றம்சாட்டியுள்ளது.

1990களில் இஸ்ரேலின் எரிசக்தித்துறை அமைச்சராக செயல்பட்ட மருத்துவரான கோனென் சேஜவ், நைஜீரியாவில் தங்கியிருந்தபோது இரானிய உளவுத்துறையால் பணியமர்த்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

"விண்வெளி படை" அமைக்க டிரம்ப் உத்தரவு

படத்தின் காப்புரிமை UniversalImagesGroup

அமெரிக்க ராணுவத்தின் ஆறாவது படைப்பிரிவாக " விண்வெளி படையை" உருவாக்குமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், "அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பைக் கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது, நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

'அமெரிக்கா ஒரு குடியேற்ற முகாமாக இருக்காது'' - டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவை ஒரு குடியேற்ற முகாமாக மாற்ற தான்அனுமதிக்கப் போவதில்லை என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

'அமெரிக்கா ஒரு குடியேற்ற முகாமாக இருக்காது'' என வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அவர், மேலும் கூறுகையில், ''அகதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு இடமாகவும் அமெரிக்கா இருக்காது'' என்று குறிப்பிட்டார்.

டெக்சாஸில் உள்ள வேலியால் சூழப்பட்ட உறைவிடத்தில் ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கடந்த வார இறுதியில் வெளியானது.

உலகக்கோப்பை கால்பந்து: துனீசியாவை வீழ்த்திய இங்கிலாந்து

படத்தின் காப்புரிமை AFP

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் காயம் காரணமாக அளிக்கப்படும் கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் அடித்த அற்புதமான கோலின் காரணமாக 2-1 என துனீசியாவை இங்கிலாந்து வென்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வென்ற போதிலும், சில முக்கியமான தருணங்களில் அந்த அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

இங்கிலாந்து அணியின் சார்பாக கேப்டன் ஹாரி கேனே இரண்டு கோல்களையும் அடித்தார். ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்தில் அவர் முதல் கோலை அடித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :