எந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

எந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

பட மூலாதாரம், Lucas Schifres/ Getty Images

தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை.

நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கும் மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே.

ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன?

உங்களின் உள்ளங்கையே அதற்கான சிறந்த அளவுகோல் என்கிறார் உணவு நிபுணரான மோனிகா செயிமிக்கா.

நமது கைகளின் அளவை வைத்து எத்தகைய உணவை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பிரிக்கமுடியும் என்கிறார் அவர்.

` காய்கறிகள், புரதம், பழங்கள், பால் வகை உணப்பொருட்கள் என நம்மிடம் பல வகையான உணவுக்குழுக்கள் உள்ளன. ஆகவே, சிறந்த, சமமான, சரியான அளவிலான உணவுகளை தேர்வு செய்வது என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. இதை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள நம் கைகளின் அளவை நினைவில் வைக்க வேண்டும்.`

அவர் கூறும் வழிமுறைகள் என்னென்ன?

பட மூலாதாரம், Jeffrey Greenberg/UIG via Getty Images

பழவகைகள்:

அது ஒரு ஆப்பிளாக இருந்தாலும், சோளமாக இருந்தாலும் உள்ளங்கை அளவை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர். நாம் சாப்பிடும் தட்டில் 1/3 பங்கு கார்போஹைட்ரைட் இருந்தல் வேண்டும்.

புரதம்:

சிறந்த அளவிலான புரதச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள மாமிசம், மீன், பருப்பு, பயறு ஆகியவற்றை ஒரு நாளின் உணவில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துறைக்கிறார். புரதத்தின் அளவு என்பது உங்கள் கையில் பின்பகுதி அளவு இருத்தல் வேண்டும்.

பட மூலாதாரம், PHILIPPE HUGUEN/AFP/Getty Images

பால் வகை உணவுகள்:

பால் அல்லது பாலுக்கு மாற்றாக உள்ள உணவுகளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பால்வகை உணவு என்பது, தீப்பெட்டி அளவிலான வெண்ணை, சிறிய கோப்பை ஆளவு பால் அல்லது சிறிதளவு தயிரான இருக்கலாம்.

குறைந்தது 80% நேரங்களில் சத்தான உணவையே உட்கொள்ள முயலவேண்டும் என்கிறார் மோனிகா.

`சில நாட்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்னவேண்டும் என்பதுபோல தோன்றுவது மனித இயல்பே. ஆனால், அதையே ஒரு வழக்காமக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மீண்டும் சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு திரும்புவதே சிறந்தது` என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :