சிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு

  • 21 ஜூன் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா: கிழக்கு கூட்டாவில் போர் குற்றங்கள்

படத்தின் காப்புரிமை Reuters

கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச்சியாளர்கள் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

டமாஸ்கஸ் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளில் பாகுபாடின்றி தொடர்ந்து குண்டு வீசியது போர் குற்றமாகும் என கிளர்ச்சியாளர்கள் குழு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில் முடக்கப்படும் இணைய வசதிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அல்ஜீரியாவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நூரியா

அல்ஜீரியாவில் உயர்நிலை பள்ளி தேர்வு நேரங்களில், அந்நாடு முழுவதும் இணைய வசதிகள் முடக்கி வைக்கப்பட்டன. தேர்வில் மோசடி ஏதும் நடைபெறாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வினாதாள் வெளிவராமல் இருக்க தேர்வு நேரங்களில் அனைத்து விதாமான இணைய வசதிகளும், பள்ளி தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்படுகிறது.

தேர்வு நடைபெறும் தேதிகளான ஜுன் 20 முதல் 25ஆம் தேதி வரை இந்த முடக்கம் செயல்பாட்டில் இருக்கும்.

குடியேறிகள் பிரச்சனை: பிடிவாதத்தை தளர்த்தினார் டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவுக்கு ஆவணங்கள் இல்லாமல் வரும் குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.

ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைது செய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது.

டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய ஆணை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை.

மீண்டும் கோஸ்டா அபாரம்: ஸ்பெயின் வெற்றி

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இரான் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வென்றது.

போர்த்துக்கல் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 2 கோல்கள் அடித்த ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டீகோ கோஸ்டா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான கோலை அடித்தார்.

இதனிடையே, மற்றொரு போட்டியில் மொரோக்கோ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் போர்த்துக்கல் வென்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :