பெண்களை உடல் முடியுடன் காட்டிய விளம்பரம்: கொண்டாடிய பெண்கள்

BILLIE ON UNSPLASH படத்தின் காப்புரிமை BILLIE ON UNSPLASH

"உடலில் முடி. அனைவருக்கும் இது உள்ளது."

இந்த சாதாரண விஷயம், அமெரிக்காவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வதைக் காட்டும் ஒரு புதிய ரேஸர் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இதுதான் இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ளி.

நிச்சயமாக அது புரட்சிகரமான விளம்பரம் அல்ல. ஆனால், வழக்கமான ரேஸர் விளம்பரங்களில் ஏற்கனவே முற்றிலும் மென்மையானதாக இருக்கும் பெண்களின் கால்களே காட்டப்படும்.

ரேஸர் விளம்பத்தில் பெண்களை முடியுடன் காட்டுவது 100 வருடத்தில் இதுவே முதல் முறை என ரேஸர் நிறுவனமான பில்லி கூறுகிறது. இதன் விளைவாக இந்த விளம்பரம் வைரல் ஆனது.

இந்த விளம்பரத்தில் பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதை பல பெண்கள் சமூகவலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர்.

'' இது மிகவும் அழகாக இருக்கிறது'' என ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

''உடலில் முடி இருந்தால் வெட்கப்பட வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது.. பெண்களுக்கு, முடியற்ற உடல் இருப்பதாக அனைத்து நிறுவனங்களும் நிறுவமுயலும்போது, இந்த விளம்பரம் உண்மையைப் பிரதிபலிக்கிறது'' என பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூலி கூறியுள்ளார்.

உடல் முடி பற்றி இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக இதனை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இந்த விளம்பத்திற்குப் பெருகும் ஆதரவுக்கு மத்தியில், உடலில் முடிகள் இருப்பதைச் சமூகம் இழிவாக கருதுவதை ஏன் இந்த ரேஸர் விளம்பரம் மாற்ற முயல்கிறது என சிலர் கேட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை BILLIE ON UNSPLASH

'' ஷேவ் செய்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பெண்கள் தங்கள் முடியை என்ன செய்ய வேண்டும் என யாரும் பெண்களிடம் சொல்ல முடியாது'' என்கிறார் கூலி.

'' நம்மில் சிலர் முடியை எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். சிலர் முடியைப் பெருமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். நமது முடிவுக்காக வருத்தப்படக்கூடாது'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்