ஜப்பான் கனமழையால் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை

  • 8 ஜூலை 2018
எச்சரிக்கை படத்தின் காப்புரிமை Getty Images

வடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்பான்.

அங்கு பெருத்த வெள்ளத்தோடு, கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதுபோன்ற ஒரு மழையை இதற்கு முன் பார்த்தில்லை என்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர்.

60க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஹிரோஷிமாவில் ஆற்றங்கரைகள் உடைந்ததையடுத்து பலரும் காணாமல் போயுள்ளனர்.

இரண்டு மில்லியன் மக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரங்காலம் பார்க்காமல் மீட்புக் குழுவினர் பணிபுரிந்து வருவதாக பிரதமர் ஷின்சோ அபே கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த அபே, "இன்னும் பல மக்களை காணவில்லை. மேலும், பலருக்கு உதவி தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

எப்போதும் பொழியும் மழையை விட, ஜப்பானின் மேற்குப்பகுதி மூன்று மடங்கு அதிகமாக மழையை பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை STR

ஹிரோஷிமாவில்தான் இதுவரை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மொடோயாமா நகரத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை 583 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், திங்கட்கிழமையன்று சில பகுதிகளில் 250 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகார், "இது தீவிர அபாய நிலை" என்று தெரிவித்தார்.

ஜப்பான்: நகரையே மூழ்கடித்த பெருவெள்ளம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜப்பான்; நகரையே மூழ்கடித்த பெருவெள்ளம் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்