பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா - பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Dan Kitwood
Image caption பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன்

அரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர்.

முன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார்.

பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில் இருந்து விலகிய சில மணிநேரங்களில் இரண்டாவது மூத்த அமைச்சரும் விலகியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தனது புதிய பிரெக்ஸிட் திட்டம் குறித்து விலக்குவதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். பிரதமரின் திட்டம் பல கன்செர்வேட்டிவ் எம்.பிக்களுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29, 2019 உடன் வெளியேறவுள்ளது. ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு வர்த்தகம் செய்து கொள்வது என்பதை இரு தரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.

ஜான்சன் வெளியேறியது இக்கட்டான சூழ்நிலையையும் பிரதமருக்கு முழுமையான ஒரு நெருக்கடி நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என பிபிசியின் அரசியல் ஆசிரியர் லாரா குயின்ஸ்பெர்க் கூறுகிறார்.

ஐரோப்பிய நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வெளியேறுதல் மற்றும் சுதந்திரமாக மக்கள் இடம்பெயர்வதை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவற்றில் சமரசம் செய்து கொள்வதன் மூலம் பிரிட்டன் எந்த அளவிற்கு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்பதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் வேறுபாடு நிலவுகிறது.

தெரீசா மே வடக்கு அயர்லாந்தின் டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியின் பத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றார்.

ஆகவே பிரிவு ஏற்பட்டால், தெரீசா மேவின் எந்தவொரு திட்டமும் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் வைத்துக்கொள்ள முடியுமா எனும் சந்தேகம் எழுகிறது. மேலும் பிரதமர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள சவால்களை சந்திக்க நேரிடுமா என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.

மேலும் அமைச்சர்கள் ராஜினமா செய்வார்களா?

பிபிசியின் லாரா குயின்ஸ்பெர்க் சொல்வது என்ன?

தற்போது போரிஸ் ஜான்சன் ராஜினமா செய்துள்ளார். பிரதமர் தெரீஸா மேவின் பிரெக்ஸிட் வியூகமானது போரிஸ் ஜான்சனை மகிழ்விக்கவில்லை என்பது நீண்டகாலமாக தெளிவாக தெரிந்த விஷயமே.

அவர் ராஜினாமா செய்தது பெரிய கதை. கடந்த இரண்டு நாள்களாக நடந்த விஷயங்களுக்கு கணிசமான கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக அவரது ராஜினாமா அமைந்துள்ளது மேலும் தெரீஸா மேவுக்கும் மற்றும் அவரது முழு பிரெக்ஸிட் திட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போரிஸ் ஜான்சன்தான் பிரெக்ஸிட்டின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். பிரெக்ஸிட் நடப்பதற்கும் முக்கிய காரணகர்தாவாக இருந்த அரசியல்வாதி அவர். நல்லதோ கெட்டதோ நாட்டில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாக அவர் இருந்தார்.

2016 ஜூனில் இருந்து ஜான்சன் வெளியுறவு செயலராக இருந்தார்.

தற்போது அவரது ராஜினாமா தெரீசா மேவின் உரைக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் குறித்து ஜான்சன் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பேசிய மே, போரிஸ் ஜான்சனுக்கும் டேவிஸுக்கும் பாராட்டுரை வாசித்தார். ஆனால் ''பிரெக்ஸிட் குறித்த வாக்கெடுப்பின் முடிவுக்கு நமக்கு இருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற சிறந்த வழியாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: