பெண்கள் அதிகம் பங்கேற்கும் பாகிஸ்தான் தேர்தல்: 5 சுவாரசியத் தகவல்கள்

பாகிஸ்தானியர்கள் வரும் 25 ஆம் தேதி தங்களது அடுத்த அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க இருக்கிறாகள். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் குறித்த ஐந்து சுவாரசியத் தகவல்களை பார்ப்போம்.

பாகிஸ்தான் பொது தேர்தல்

1. ஒரு பிரதமரும் பதவிக்காலத்தை நிறைவு செய்ததில்லை

எந்த பாகிஸ்தான் பிரதமரும் தமது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடிந்ததில்லை. ராணுவ சதி, ராணுவம் ஆட்சியை கைப்பற்றுதல் குறித்த நெடிய வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. பாகிஸ்தானில் முதல் பொதுத் தேர்தல் 1970 ஆம் ஆண்டு நடந்தது.

ஒரு தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரம் முறையாக கைமாறப் போவது, பாகிஸ்தானில் இது இரண்டாவது முறை.

2. முன்னாள் பிரதமர் போட்டியிட முடியாது

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 2013 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், அவர் பதவியைத் தொடர அனுமதிக்கப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் 2017ல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவருக்கு அண்மையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ், அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தம்மை பதவி நீக்கியதற்கு ராணுவத்தை குற்றம் சொல்கிறார்.

3. தீவிர வலதுசாரி, தீவிரவாத வேட்பாளர்கள்

இந்த 2018 பொதுத் தேர்தலில், பெரும் எண்ணிக்கையில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

இதுபோன்ற தீவிரப்போக்கு உடைய குழுக்கள் மைய நீரோட்ட அரசியலில் அனுமதிக்கப்படுவது குறித்து தங்கள் கவலைகளை பாகிஸ்தானிய ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

இறைவனைப் பழிப்பது பாகிஸ்தானில் கடுமையான குற்றம். மரண தண்டனைவரை கூட கிடைக்கும். இது போன்ற மதவிவகாரங்கள் பொதுத் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.

4. அதிகளவில் பெண்கள்

அதிகளவிலான பெண்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். .

272 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் தேர்தலில், 171 பெண்கள் பங்கெடுக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஆணாதிக்கம் கொண்ட பழங்குடிகள் பகுதியில் முதல்முறையாக அலி பேகம் என்ற பெண் போட்டியிடுகிறார்.

5. தேர்தலில் திருநங்கைகள்

இந்த தேர்தலில் ஐந்து திருநங்கைகள் போட்டியிடுகிறார்கள்.

முதல்முறையாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :