புற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு
ஜான்சன்&ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிசெளரி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி, தண்டிக்கும்படியான சேதங்களை ஏற்படுத்தியதற்காக கூடுதலாக $ 4.1 பில்லியன் அபராதம் விதித்தார்.
மருந்துத் துறை ஜாம்பவானான ஜான்சன் & ஜான்சன், பிரபலமான தனது குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் தொடரப்பட்ட சுமார் 9,000 சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு "ஆழ்ந்த ஏமாற்றம்" தருவதாக கூறிய நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியிருக்கிறது.
பட மூலாதாரம், Science Photo Library
ஆறு வாரகால விசாரணையில், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பல தசாப்தங்களாக குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் பிற பவுடர் பொருட்களைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோயை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடுத்த 22 பெண்களில் 6 பேர் கருப்பை புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டனர்.
தனது நிறுவனத்தின் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது ஜான்சன் & ஜான்சன், நிறுவனத்திற்கு 1970களிலேயே தெரிந்த போதிலும், அதன் அபாயங்களைப் பற்றி இந் நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.
புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்