பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 85 பேர் பலி

தாக்குதல் நடந்த இடத்தில் காயம் பட்ட ஒருவர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

கடந்த ஓராண்டில் பாகிஸ்தானில் நடத்தப்பட்டதிலேயே மோசமான தாக்குதல் இது.

தென் மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உள்பட 85 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கத் தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தியாளர் குடாய் நூர் நாசிரிடம் பேசிய அவர் புதிதாகத் தொடங்கப்பட்ட பலுசிஸ்தான் அவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சிராஜ் ரைசானியின் சகோதரர் லஷ்காரி ரைசானி தமது சகோதரர் கொல்லப்பட்டதை பிபிசியிடம் உறுதி செய்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மருத்துவமனை ஒன்றில் இறந்தவர்களை அடையாளம் காணும் உறவினர்கள்.

மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குவெட்டா என்ற இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நடந்ததாக அந்த மாவட்ட துணை கமிஷனர் குவெய்ம் கான் லஷ்ஷாரி பிபிசி செய்தியாளர் முகம்மது காசிமிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: