உலகப்பார்வை: சொந்த பயணமாக ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு
பட மூலாதாரம், ANDY BUCHANAN
பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்து சென்றுள்ளார். இங்கு டிரம்பிற்கு சொந்தமான இரண்டு கோல்ப் மைதானங்கள் உள்ளன. டிரம்பையும் அவரது சர்ச்சைக்குரிய கொள்கைகளையும் ஸ்காட்லாந்து வரவேற்க முடியாது என கூறி பலர் போராட்டம் நடத்தினர்.
இத்தாலி- மால்டா இடையே விவாதம்
பட மூலாதாரம், Getty Images
மத்தியதரைக் கடற்பகுதியில் கப்பலில் உள்ள அகதிகளை யார் ஏற்றுக்கொள்வது என்பதில், இத்தாலி மற்றும் மால்டா நாடுகள் இடையே புதிய விவாதம் ஏற்பட்டுள்ளது. நெரிசல் நிறைந்த மீன்பிடி படகில் உள்ள அகதிகள் தற்போது இத்தாலியின் ஒரு தீவுக்கு செல்ல விரும்புவதாக மால்டா அரசு கூறியுள்ளது. ஆனால், அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மால்டாவை இத்தாலி வலியுறுத்தி வருகிறது.
மெக்ஸிகோ உடன் நல்ல உறவு
பட மூலாதாரம், Getty Images
மெக்ஸிகோ அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார் உடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் பாம்பியோ கூறியுள்ளார். இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவதாகவும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
திருச்சபைகளில் போலிஸார் சோதனை
பட மூலாதாரம், Getty Images
சிலி நாட்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து வரும் போலிஸார் திருச்சபை அலுவலகங்களில் சோதனை நடத்திப் பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். தேமுக்கோ மற்றும் வில்லாரிகா ஆகிய நகரங்களில் உள்ள திருச்சபைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இங்குள்ள திருச்சபை ஆயர்கள், விசாரணை அதிகாரிகள் கேட்ட தகவல்களைக் கொடுக்க மறுத்த பிறகு சோதனை நடந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்