சிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

சிங்கப்பூரில் 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

சிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் சுகாதார தரவுதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் இலக்கு வைத்து நன்கு திட்டமிட்டு தரவு திருட்டில் ஈடுபட்டதாக அரசாங்க அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து ஜூலை நான்காம் தேதிவரை மருத்துவமனைகளுக்கு சென்றவர்களின் தரவுகள் திருடப்பட்டிருக்கிறது.

பெயர்கள், முகவரிகள் மட்டும் திருடப்படவில்லை, மருத்துவ ஆவணங்கள், புறநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் என பல தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். கிட்டத்தட்ட 1,60,000 புறநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

பதிவுகள் எதுவும் நீக்கப்படவோ, திருத்தப்படவோ இல்லை. பிற நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருத்துவரின் குறிப்புகளும் திருடப்படவில்லை. பிற பொது சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் தரவுகளில் இதுபோன்ற ஊடுருவல் நடைபெற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

இருமுறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பிரதமர் லி சியாங் லூங்கின் தரவுகள், புறநோயாளியாக அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் என அவரது தரவுகள் அனைத்தும் குறிப்பாகவும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டது.

செல்வ செழிப்பு மிகுந்த நாடான சிங்கப்பூர் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்காக பெருமைபடும் நாடு.

படத்தின் காப்புரிமை AFP

சிங்ஹெல்த்தின் தரவுதளம் ஜூன் 27 முதல் ஜூலை நான்காம் தேதி வரை முடக்கப்பட்டிருந்த்தாக அரசு கூறுகிறது. அதன் 28 ஆயிரம் கணினிகளை பணியாளர்கள் அணுகுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலக மின்னஞ்சல்கள், பகிர்வு ஆவணங்கள் மற்றும் இணைய தாக்குதல்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளது.

பிற பொது சுகாதார நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: