தாய்லாந்து குகை மீட்பு: நாயகர்களுக்கு கலை மரியாதை

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான சியாங் ராய் மாகாணத்தின் தாங் லுயாங் குகைக்குள் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறார்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்ட கதாநாயகர்களை கௌரவிக்கும் விதமாக மிக பெரிய சுவரோவியம் வரைந்து மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கலை வேலைப்பாடு உள்ளூர் ஓவியர்கள் குழுவால் வரையப்பட்டுள்ளது. "காட்டுப்பன்றிகள்" கால்பந்து அணியை சேர்ந்த தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்டோரை மீட்கும் பணியின்போது உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முன்னாள் அதிகாரி சமான் குனானுக்கு இந்த சுவரோவியங்களில் மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY / POOM PUI

வெற்றிகரமாக முடிந்த மீட்பு நடவடிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கண்காட்சியின் ஒரு பகுதியாக தாய்லாந்தின் வட பகுதியிலுள்ள தனியார் கலைக்கூடம் ஒன்றான 'ஆர்ட் பிரிட்ஜில்' இந்த சுவரோலியங்கள் காட்சிக்கு திறக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களின் கால்பந்து வீர்ர்களை குறிக்கும் விதமாக ஒரு காட்டு பன்றியும், அதன் குட்டிகள் காலடியில் இருப்பதை போன்று சமான் குனானின் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த மாதம் ஜூன் 23ம் தேதி தாம் லுயாங் குகையில் சிக்கிக்கொண்டனர். 9 நாட்கள் கழித்து, ஜூலை 2ம் தேதி 4 கிலோமீட்டருக்கு அப்பால் மீட்புதவி முக்குளிப்போரால் அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images

கீழ் காணுகின்ற பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பவர் ரிக் ஸ்டான்டன் உள்பட, குகையில் சிக்குண்டோரை மீட்பதற்கு மிக முக்கிய பங்காற்றிய கதாநாயகர்களை இந்த சுவரோவியங்கள் சித்தரிக்கின்றன.

படத்தின் காப்புரிமை GETTY / GAVIN NEWMAN

ஸ்டான்டன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சகா முக்குளிப்பவர் ஜான் வோலாதென் (கீழே) ஆகியோர் 9 நாட்களாக குகையில் சிக்கியிருந்த 12 சிறார்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் முதலில் சென்றடைந்து கண்டுபிடித்தனர்.

"இது முற்றிலும் தெரியாத, முன்னொருபோதும் செல்லாத பகுதியாகும், இதுபோல இதற்கு முன்னால் ஏதுவும் செய்யவில்லை. எனவே, நிச்சயமாக சந்தேகங்கள் இருந்தன" என்று ஸ்டான்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை GETTY / AFP

பிரிட்டனுக்கு திரும்புகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜான் வோலாதென், "அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம். சிக்கலான நிலைமையை உணர்ந்ததால்தான் அனைவரையும் மீட்க இவ்வளவு காலமாகியது" என்று கூறினார்.

பிரிட்டன் முக்குளிப்பவர் வெர்ன் அன்ஸ்வர்த்தும் சுவரோவியத்தில் சிறப்பிடம் பெறுகிறார்.

குகையின் அருகில் வாழ்ந்த அன்ஸ்வர்த், தாம் லுயாங் குகை வளாகம் பற்றி விரிவாக ஆய்வு செய்திருந்தது மிகவும் நன்மையானதாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை GETTY / AFP

சுவரோவியத்தில் வரையப்பட்டுள்ள குகை ஆய்வில் ஈடுபட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் சார்லஸ் ஹார்பரின் உருவம்.

படத்தின் காப்புரிமை GETTY / AFP

தனிச்சிறப்பு மிக்க தொப்பியோடு இந்த குகை மீட்பு நடவடிக்கையின் தலைவர் சியாங் ராய் மாகாண ஆளுநர் நொரன்பாக் அசோட்டானகாரன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த குகையின் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், "இந்த குகை மீட்பு நடவடிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த குகை பகுதி வாழும் அருங்காட்சியகமாக உருவாகும்" என்று நொரன்பாக் அசோட்டானகாரன் தெரிவித்தார்.

"ஊடாடும் தரவுதளம் ஒன்று அமைக்கப்படும். அனைவரையும் கவருகின்ற தாய்லாந்தின் இன்னொரு இடமாக இது மாறும்" என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்: என்ன செய்கிறது மீட்புக் குழு?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தாய்லாந்து குகை: என்ன செய்கிறது மீட்புக் குழு? (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :