உலகப் பார்வை: தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ

படத்தின் காப்புரிமை Getty Images

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளது.

சூப்பர் ஹீரோவாக செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான திருநங்கை நிக்கோல் மெய்ன்ஸ் நியா நல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மூன்றாம் பாலினக் குழந்தைகள் பார்க்க, மற்றவர்கள் திருநங்கைகளை புரிந்து கொள்ள, இந்த சூப்பர் ஹீரோ தொடர் பொருந்தும் என கலிஃபோர்னியாவில் பேசிய நிக்கோல் கூறினார்.

சூப்பர் கர்ல் தொடரின் நான்காவது பாகத்தில் இவர் அறிமுகமாக உள்ளார்.

"ரஷ்ய முகவராக நான் இருக்கவில்லை"

படத்தின் காப்புரிமை EPA

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் ரஷ்ய அரசாங்கத்துடன் உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதிபர் டிரம்பின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் கார்டர் பேஜ் மறுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தின்போது கார்டர் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டதாக எஃப் பி ஐ நம்பியது.

தான் எந்த வெளிநாடுகளின் முகவராக இருந்ததில்லை என்றும், இவ்வாறு கூறுவது கேலியாக உள்ளதென்றும் கார்டர் கூறியுள்ளார்.

மலேரியாவுக்கான மருந்து

படத்தின் காப்புரிமை Science Photo Library

மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மருந்து குறிப்பாக ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான மருந்தாகும். இவ்வகை மலேரியாவால் ஆண்டுக்கு 8.5மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டஃபிநோகுயின் என்னும் மருந்தை கண்டறிந்தது ஒரு "மிகப்பெரிய சாதனை" என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இனி உலகம் முழுவதும் உள்ள கண்காணிப்பாளார்கள் இதனை மக்களுக்கு பரிந்துரை செய்வது குறித்து ஆராய்ச்சி செய்வர்.

மேலும் படிக்க: 60 வருடங்களில் முதன்முறையாக ஒப்புதல் பெற்ற மலேரியா மருந்து

ஆப்கானில் குண்டு வெடிப்பு

படத்தின் காப்புரிமை Reuters

ஆப்கானிஸ்தான் காபுல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அந்நாட்டின் துணை அதிபர் அப்துல் ரஷீத் டொஸ்தம் திரும்பிய சற்று நேரத்திலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால், இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :