உலகப் பார்வை: கிரீஸில் பரவும் காட்டுத்தீ - சுமார் 50 பேர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

கிரேக்கத்தில் பரவும்காட்டுத்தீ - 20 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA

கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

"எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்" என கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு, 11 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் குழந்தைகள் ஆவர்.

சாலை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட குடிசைப்பகுதி

படத்தின் காப்புரிமை Reuters

கென்ய தலைநகர் நெய்ரோபியில் இருவழி சாலை ஒன்று கட்டுவதற்காக, அங்குள்ள குடிசைப்பகுதியில் உள்ள 30,000 மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான கிபெராவில் இருந்து மக்கள் வெளியேற, அவர்களுக்கு இரண்டு வாரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. விடியற்காலையில் புல்டோசர் கொண்டுவரப்பட்டு வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

ராக்கெட் ஏவுதளம் அகற்றம்

படத்தின் காப்புரிமை Reuters

தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோள் படங்கள் கடந்த ஜூன் மாதம் நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பின்போது தான் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் ரீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தன்னிடம் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு இயந்திர சோதனை களத்தை அளித்துவிடப் போவதாக டிரம்ப் , இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உச்சி மாநாட்டின் முடிவில் தெரிவித்தார். ஆனால், அது எந்த இடம் என்று அப்போது குறிப்பிடவில்லை.

டொரொன்டோ துப்பாக்கிச்சூடு

படத்தின் காப்புரிமை Reuters

டொரொன்டோவில் நடந்த துப்பாக்கிசூடுக்கு காரணமான சந்தேக நபரான 29 வயதான ஃபைசல் ஹூசைனை கனடா நாட்டு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தின் அசாதாரண சூழ்நிலையால், சந்தேக நபரின் பெயரை வெளியிட்டுள்ளதாக ஒன்டாரியோ சிறப்பு புவனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :