பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலை: LIVE

இம்ரான்கான்

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார்.

இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்தாலும், அறுதிப் பெரும்பான்மை பெறுமா? என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது,

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாலை6.02: இந்தியாவுக்கு செய்தி

வறுமையை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து வர்த்த தொடர்பு வைத்திருக்க வேண்டுமென இம்ரான் கான் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் வன்முறையும், அங்குள்ள மனித உரிமை நிலையும் நமது பெரிய பிரச்சனையாக உள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இப்போது இருக்கின்ற மாதிரியான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால், பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. உறவை மேம்படுத்த நீங்கள் ஓர் அடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மாலை 5.57:ஆப்கான் மக்களுக்கு அமைதி

தன்னுடைய வெளியுறவு கொள்கையை குறிப்பிடும்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமைதி அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானில் எல்லா நிலையிலும் அமைதி கொண்டு வர தனது அரசு இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைபோல பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் திறந்த எல்லைகளை கொண்டிருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாலை 5.54: வெளியுறவு கொள்கை பெரும் சவால்

அண்டை நாடுகளோடு மேம்பட்ட உறவை நிறுவப்போவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,

வறுமை ஒழிப்பில் சீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை நாட்டின் மிக பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலை 5.52:பிரதமர் மாளிகையில் செல்வதற்கு வெட்கப்படுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை தங்களுடைய அரசு முடிவு செய்யும் என்றும், பிரதமர் வீட்டை கல்வித்துறை நிலையமாகவும், ஆளுநர் இல்லத்தை பொது இடமாகவும் பயன்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலை 5.30:பொது மக்களின் வரிப்பணம் பாதுகாப்பு

இதுவரை வந்த ஆட்சியாளர்கள் பெரிய மாளிகைகள், வெளிநாட்டு பயணங்கள் என்று பணத்தை செலவு செய்துள்ளனர்.

எங்களது காலத்தில் முதலீடு உருவாக்கப்படும். பொது மக்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மாலை 5.30: நாட்டிற்கு பணியாற்ற அல்லா கடவுள் தனக்கு தந்திருக்கும் வாய்ப்புக்கு நன்றி கூற விரும்புவதாகவும், இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு நன்றியுடன் இருப்பதாகவும் #PrimeMinisterImranKhan, @ImranKhanPTI என்ற கேஷ்டேக்குகளுடன் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கில் நேரலையில் பேசி வருகிறார்.

4:30 PM:அதிகாரபூர்வமற்ற முடிவுகளில் பாகிஸ்தானின முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ராஃப், 95 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இம்ரான் கானின் கட்சி வேட்பாளரான சௌத்திரி .எம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இம்ரான் கான் முன்னிலை

2:01 PM: இதுவரை வெளிவந்துள்ள 33 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், 20இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆறு தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி நான்கு இடங்களிலும், மீதமுள்ள மூன்று தொகுதிகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1:37 PM: "22 ஆண்டுகளுக்கு பின்னர், அவமானங்கள், தடைகளை தாண்டிய பிறகு, தியாகங்களை செய்த பிறகு, என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார். இப்போது அவருக்குள்ள முதல் சவாலே தான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதை நினைவில் கொள்ளவதுதான்" என்று இம்ரான்கானின் முன்னாள் மனைவி ஜெமிம்மா கோல்டுஸ்மித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1:10 PM: இந்த பொதுத்தேர்தலில் 59வது தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வேட்பாளரைவிட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:40 PM: தேசிய தொகுதி எண் 191இல் போட்டியிட்ட தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் பிரபல பெண் வேட்பாளரான சர்தஜ் குல் 79,817 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:13 PM: தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி பெஷாவரில் மற்றொரு தொகுதியையும், பழங்குடி மக்கள் அதிகளவில் வாழும் தேசிய தொகுதி 41 மற்றும் 66இல் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான்கான்

பட மூலாதாரம், ARIF ALI

11:57AM: இதுவரை வெளிவந்துள்ள அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது முதல் வெற்றியை பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்துள்ளது.

11:40 AM: இதுவரை வெளிவந்துள்ள 17 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், 10இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலா மூன்று தொகுதிகளிலும், மீதமுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:25 AM: பாகிஸ்தானின் முக்கிய செய்தித்தாள்களின் முதற்பக்கங்கள் என்ன சொல்லுகின்றன?

பாகிஸ்தான் தேர்தல்
பாகிஸ்தான் தேர்தல்

11:15 AM: இதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரியவந்துள்ள 12 தொகுகளில் 8இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஒரு தொகுதியில் முத்தஹீதா மஜ்லிஸ் இ-அமல் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப்

10:55 AM: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப், தான் போட்டியிட்ட தேசிய தொகுதி எண் 124இல் வெற்றிபெற்றுள்ளார் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:35 AM: பழங்குடி மக்கள் அதிகளவில் உள்ள தேசிய தொகுதி எண் 40இல் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் குல் தாத் கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரைவிட 16,766 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

10:15 AM: பெஷாவரிலுள்ள தேசிய தொகுதி எண் 28 மற்றும் 30 ஆகிய தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் வேட்பாளர்கள் முறையே அர்பாப்-இ-அமீர் அயூப் மற்றும் ஷிர் அலி அர்பாப் ஆகியோர் வெற்றிபெறுள்ளனர்.

9:50 AM: இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் நான்கு தொகுதிகளிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

9.20AM: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் ஜின்னா அக்பர் மலாக்னட் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் 81,310 வாக்குகள் பெற்றுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான குல் நசீம் கான் 31,312 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

8:49 AM: லாகூரில் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வெற்றி

லாகூரில் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் மாலிக் கராமத் அலி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான செய்ஃப் அல்-முல்க் கொகரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மாலிக் பெற்ற மொத்த வாக்குகள் 64,765.

Please wait while we fetch the data . . .

LIVE

2018
2013
Use search to find results for your constituencies

தொழில்நுட்ப கோளாறுகள்

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து 10 மணி நேரம் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் தேர்தலில் பல சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில், முடிவுகள் அறிவிப்பு தாமதமானது.

"முடிவுகளுக்கு பின்னால் எந்த ரகசியமும் இல்லை": தேர்தல் ஆணையம்

"வாக்கு எண்ணிக்கையில் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் எந்த சதியும் இல்லை" என பாகிஸ்தான் தேர்தல் ஆணைய செயலாளர் பாபர் யாகூப் தெரிவித்துள்ளார்.

PAKISTAN

பட மூலாதாரம், Reuters

இம்ரான் கான் முன்னிலை

பாகிஸ்தானில் நடைபெற்ற 2018 பொதுத்தேர்தலில், வாக்குப்பதிவு முடிந்து 10 மணி நேரத்துக்கு பிறகு, முதல் தேர்தல் முடிவுகளை மட்டும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராவல்பிண்டியில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வேட்பாளரான முகமது அட்னான் முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், இம்ரானின் கட்சி இந்த தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டுகின்றன.

இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சியின் முன்னணி நிலவரத்தை கொண்டாடி வருகின்றனர்.

Imran Khan

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

இம்ரான் கான்

இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி இந்த தேர்தலில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அவரது கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அவ்வாறான சூழலில், மற்ற கட்சிகளோடு இணைந்து தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முற்படக்கூடும். ஆனால், அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை ஆட்சி அமைக்கப் போவது குறித்து உறுதியாக கூற முடியாது.

தற்கொலைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலி

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

வாக்குச்சாவடிக்கு மிக அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக பிபிசி உருது செய்தியாளர் முகமது காசிம் தெரிவித்தார்.

தற்கொலைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலி

பட மூலாதாரம், Getty Images

இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இந்த பொதுத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுவது ஏன்?

1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதில் இருந்து, மக்களாட்சி மற்றும் ராணுவ ஆட்சிக்கு இடையே பாகிஸ்தான் ஊசலாடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், தேர்தலில் முறையாக தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைப்பது பாகிஸ்தான் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது என்பதும் இந்த பொதுத்தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

மக்களில் சிலர் நாட்டின் ஜனநாயக வலிமையைக் கொண்டாடுகின்றனர். ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சிக்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

நீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக பி.எம்.எல் கட்சி குற்றம்சாட்டுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கிட்டத்தட்ட 17,000 கட்சி உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

மற்றொரு புறம், ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதோடு, கடுமையான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன. பயங்கரவாதக் குழுக்கள் தேர்தலில் பங்கெடுப்பது பாகிஸ்தானின் சில ஜனநாயகவாதிகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது.

பாகிஸ்தான்

தனக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அந்நாட்டு ராணுவம், தனது பழைய அரசியல் சூழ்ச்சிகளையே தொடர்வதாக பலரும் நம்புகின்றனர். தேர்தலில் மோசடி செய்ய "மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்" மேற்கொள்ளப்படுவதாக கூறும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், இது "முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை" ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

இந்த மாதம் 13ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 150 பேரை பலி கொண்ட பலூசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் (தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது) உட்பட தேர்தல் பிரசாரங்களில் வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்றன.

களத்தில் இருக்கும் பிரபலங்கள்

நவாஸ் ஷெரீஃப் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)), 68 வயது

நவாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், TOLGA AKMEN/AFP/GETTY IMAGES

மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீஃப்பின் குடும்பத்தினருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஷெரீஃப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகள் மரியத்திற்கும் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்தது.

லண்டனில் சிகிச்சைப் பெற்று வரும் தனது மனைவியுடன் இருந்த அவர், மகள் மரியம் நவாஸுடன் பாகிஸ்தானுக்கு திரும்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தற்போது தந்தையும் மகளும் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ராணுவத்தை வெளிப்படையாக விமர்சித்தது மற்றும் இந்தியாவுடன் சுமூகமான உறவுகளை விரும்பியதற்காக ராணுவம் தனக்கு எதிராக செயல்படுவதாக நவாஸ் ஷெரீஃப், விமர்சிக்கிறார். ஆனால் ராணுவம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

தற்போது கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சாபஸ் ஷெரீஃப், நவாஸ் ஷெரீஃபின் சகோதரர். அவர்தான் தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)க்கு தற்போது 182 தொகுதிகள் உள்ளன.

இம்ரான்கான் (பி.டி.ஐ) 65வயது

இம்ரான்கான்

பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP/GETTY IMAGES

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலில் அடியெடுத்து வைத்த பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பி.டி.ஐ, (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சி, அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் பி.டி.ஐ இதுவரை நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை.

இந்தமுறை, இம்ரான்கான் ராணுவத்திற்கு விருப்பமான பிரதமர் வேட்பாளராக இருப்பதாலும், ராணுவம் பிற கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாலும் இம்ரான்கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பல அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதை இம்ரான்கானும், ராணுவமும் மறுக்கின்றனர். ஆனால் பிபிசிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜென்ரல் பாஜ்வா, இம்ரான்கானைப் போன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவானவரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறுகிறார். அல் கொய்தாவுடன் தொடர்புள்ள ஒரு குழு உட்பட நாட்டின் பல சர்ச்சைக்குரிய குழுக்கள் இம்ரான்கானுக்கு ஆதரவளிக்கின்றன.

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தற்போது 32 இடங்கள் உள்ளன.

பிலாவல் பூட்டோ ஜர்தாரி (பி.பி.பி) வயது 29

பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், WARRICK PAGE/GETTY IMAGES

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பிலாவல் பூட்டோ ஜர்தாரி, வலுவான அரசியல் பின்புலம் கொண்டவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் பூட்டோவின் பேரனான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் தாய் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ.

பி.பி.பியின் தலைவரும், 28 வயது இளைஞரான பிலாவல் பூட்டோ ஜர்தாரி, தனது தாயின் கனவான, "அமைதியான, முற்போக்கான, வளமான, ஜனநாயக பாகிஸ்தான்" என்ற முழக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

பி.பி.பி கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன.

பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு தற்போது 46 இடங்கள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :