"அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

"அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான்

படத்தின் காப்புரிமை Getty/Reuters

இரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்" என இரான் சிறப்பு படை கமாண்டோ அதிபர் டிரம்பை எச்சரித்துள்ளார்.

டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் உறுதி பூண்டுள்ளதாக இரானின் செய்தி நிறுவனமான டன்ஸிம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருபோதும் அமெரிக்காவை மிரட்ட வேண்டாம் என்று இரான் அதிபரை எச்சரித்து பதிவிட்டதை தொடர்ந்து கசிம் இவ்வாறு கூறியுள்ளார்.

வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட காட்டுத்தீ

படத்தின் காப்புரிமை Reuters

கிரீஸில் 83 பேரை கொன்ற காட்டுத்தீ, வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாக குடியுரிமை பாதுகாப்பு அமைச்சர் நிகொஸ் டொஸ்கஸ் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமையன்று பரவிய தீப்பிழம்பு, சுற்றுலாவாசிகள் அதிகம் இருந்த கடலோர கிராமங்களை நாசம் செய்தது.

பாதிக்கப்பட்ட சுமார் 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை காணவில்லை.

இஸ்ரேலியர் கொலை

படத்தின் காப்புரிமை AFP

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் அருகே உள்ள ரமல்லாவில், இஸ்ரேலியர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தி கொலை செய்தவர், பொதுமக்கள் ஒருவரால் சுட்டுத்தள்ளப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

பிரிந்த குடியேறிகள் குடும்பங்கள் சேர்த்து வைக்கப்பட்டனர்

படத்தின் காப்புரிமை Reuters

நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் ஏதுமில்லாமல் அமெரிக்கா வந்த பெற்றோர்களிடம் இருந்து 2500 குழந்தைகள் அந்நாட்டு அதிகாரிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இது உலக அளவில் மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :