பாகிஸ்தான் தேர்தல்: தோல்வியை ஒப்புக் கொண்டது நவாஸ் ஷெரிஃப் கட்சி

  • 27 ஜூலை 2018
இம்ரான் கான் படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றபோதிலும், பாகிஸ்தானில் அமைகின்ற புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக பிரதான கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி கூறியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கட்சிக்கு கிடைத்திருக்கும் முன்னிலையை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தங்கள் கட்சி மதிக்கும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஹம்சா ஷாபாஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றதாக நவாஸின் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது. தேர்தலில் முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு முன்னர் தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்தபோது அரசியல் அச்சுறுத்தல்களும், வன்முறை சம்பவங்களும் பாகிஸ்தானில் அதிக அளவில் இருந்ததாக ஐரோப்பிய கண்காணிப்பு குழு ஒன்று கூறுகிறது.

ராணுவத்தின் தலையீட்டால், இந்த தேர்தலில் பயனடைந்ததாக இம்ரான்கான் குற்றம்சாட்டப்படுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :