உலகப் பார்வை: பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம்

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

பொது வெளியில் புர்கா அணிந்ததற்காக பெண்ணுக்கு அபராதம்

படத்தின் காப்புரிமை AFP

டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெண்கள் பொது வெளியில் முகத்தை மறைப்பது போன்று உடை அணிவதற்கு அந்நாட்டில் விதிக்கப்பட்ட தடை கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக 28 வயது பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கலான இந்த புதிய சட்டத்தில் புர்கா அல்லது நிக்காப் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொது வெளியில் முகத்தை மூடுவது போன்று உடை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இச்சட்டத்திற்கு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிலி: பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

படத்தின் காப்புரிமை AFP

சிலி நாட்டில் வணிக செயல்பாடுகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் தென் அமெரிக்க நாடாகும்.

பெரிய பெரிய தொழில் நடத்துபவர்கள், ஆறு மாதத்திற்குள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களக்கு 370 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

காணாமல் போன சீன சிறுமியை கண்டுபிடித்த காவல்துறை

படத்தின் காப்புரிமை VIRGINIA STATE POLICE

வாஷிங்டனில் டி.சி விமான நிலையத்தில், காணாமல் போன 12 வயது சீன சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சுற்றுலாவுக்காக அமெரிக்கா வந்திருந்த சர்ஜிங்ஜிங் மா, சர்வதேசஅளவில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பின்னர் நியூயார்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது அவரது குடும்பத்தினரோடு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை

படத்தின் காப்புரிமை AFP/Getty images

தன்மீதுள்ள பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்லி வைன்ஸ்டீன் கேட்டு கொண்டுள்ளனர்.

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு கூறியவர் ஒருவரிடம் இருந்து வந்த "வைன்ஸ்டீனுக்கு ஆதரவான" மின்னஞ்சல்களைக் சுட்டிக்காட்டி வைன்ஸ்டீன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மூன்று வெவ்வேறு பெண்களிடமிருந்து வந்த 6 குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் ஹார்லி வைன்ஸ்டீன்.குற்றம் சுமத்தியவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

முதல்கட்ட விசாரணையிலேயே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஹார்லி வைன்ஸ்டீனின் வழக்கறிஞர் வாதாடினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :