பாலியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோருகிறார் ஹார்வி வைன்ஸ்டீன்

தன்மீதுள்ள பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யுமாறு பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்லி வைன்ஸ்டீனின் கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு கூறிய பெண்ணிடமிருந்து வந்த "வைன்ஸ்டீனுக்கு ஆதரவான" மின்னஞ்சல்களைக் சுட்டிக்காட்டி தங்களது இந்த தரப்பு மனுவை தாக்கல் செய்தனர் வைன்ஸ்டீன் தரப்பு வழக்கறிஞர்கள்.

மூன்று வெவ்வேறு பெண்களிடமிருந்து வந்த 6 குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் ஹார்லி வைன்ஸ்டீன்.

ஹார்லி வைன்ஸ்டீன் மீது குற்றம் சுமத்தியவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

இந்நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஹார்வி வைன்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்புணர்வு என்று கூறப்படும் அந்த சம்பவத்துக்கு பிறகு, அதில் தொடர்புடைய பெண் வைன்ஸ்டீனுக்கு "நன்றி கூறுவது போன்றும் ஆதரவாகவும்" மின்னஞ்சல்கள் அனுப்பியதாக வைன்ஸ்டீன் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

எனவே இந்த மின்னஞ்சல்கள், இருதரப்பு சம்மத்துடனே நட்பு பாராட்டப்பட்டதாகவும், இது கட்டாய பாலியல் வன்புணர்வு ஆகாது என்பதையும் காட்டுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நியூயார்க் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஏப்ரல் 2013 மற்றும் பிப்ரவரி 2017ஆம் ஆண்டுக்குட்பட்ட காலங்களில் வைன்ஸ்டீன் மற்றும் அந்த பெண்மணிக்கு இடையே நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மார்ச் 18, 2013 அன்று நியூயார்க் விடுதி ஒன்றில் வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக அந்த பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஏப்ரல் 11, 2013 அன்று "உங்களை விரைவாக பார்க்க விரும்புகிறேன் மேலும் எனக்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் பாராட்டுகிறேன்" என்று புகார் தெரிவித்த பெண் வைன்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் அனுப்பியதையும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வைன்ஸ்டீன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த எதிர்தரப்பு வாதம் திருமணங்களில் அல்லது ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் காலங்களில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்பதை புறக்கணிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வைன்ஸ்டீன் மீது புகார் தெரிவித்த பெண் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வைன்ஸ்டீனின் வங்கி கணக்கு திவாலானது குறித்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, தனிப்பட்ட மின்னஞ்சல்களை வெளியிடக் கூடாது என்றும் அவ்வாறு வெளியிட்டால் புகார் தெரிவித்தவரின் அடையாளம் வெளியாகும் ஆபத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதே நீதிபதி வியாழனன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வைஸ்டீன் தரப்பு மனுவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளியிடாமல் அந்த மின்னஞ்சல்களை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.

66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர்.

உடன்பாடில்லாத பாலியல் நடவடிக்கைகள் இருந்ததில்லை என்று தன் மீதான குற்றங்களை ஹார்வி வைன்ஸ்டீன் மறுத்து வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்