சீன அதிபரோடு ‘வின்னி த பூ‘ கதாபாத்திரம் ஒப்பீடு: புதிய திரைப்படம் சீனாவில் தடை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிபரை கேலி செய்யும் கரடி பொம்மை: சீனாவில் திரைப்படத்துக்கு தடை

  • 11 ஆகஸ்ட் 2018

‘வின்னி த பூ‘ கதாபாத்திரமான இந்த கரடியின் படங்கள் சீனாவில் அரசியல் எதிர்ப்பின் ஓர் அடையாளமாக மாறியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த கரடியோடு ஒப்பிடப்பட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும், கரடியையும் சேர்த்து காட்டும் படம், சீனாவில் அதிக தணிக்கைக்கு உட்பட்டதாகும்.

ஒவ்வோர் ஆண்டும் 34 வெளிநாட்டு திரைப்படங்களை வெளியிடவே சீனா அனுமதிக்கிறது. இந்த காரணத்தாலும் இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், காரணம் எதுவும் கூறப்படவில்லை.

ஷி ஜின்பிங்கை அவமதிப்பதாக இதனை சீனா பார்ப்பதால் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று குளோபல் ரிஸ்க் இன்சைட்ஸ் வணிக ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :