வெனிசுவேலாவில் ஒரு கிலோ தக்காளி விலை 50 லட்சம்

  • 22 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Reuters

வெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை (கரன்சி) அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்க எவ்வளவு பணம் செலவிடவேண்டும் என்பதை அந்தப் பொருளையும், அதற்காக செலவிடவேண்டிய பணத்தையும் பக்கத்தில் பக்கத்தில் அடுக்கிவைத்து படமெடுத்து விளக்கியுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் புகைப்படக்காரர் கார்லோஸ் கார்சியா ரவ்லின்க்ஸ்.

ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன தெரியுமா? 50 லட்சம் பொலிவர்கள்!

படத்தின் காப்புரிமை Reuters

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவர் (2.22 டாலர்கள்).

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த வியாழக்கிழமை ஒரு கழிப்பறை தாள் உருளை 26 லட்சம் பொலிவர்களுக்கு விற்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவர்கள்.

வெனிசுவேலாவின் புதிய பணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள், கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவர்கள்.

கடந்த ஜூலை மாதம் வெனிசுவேலாவின் பணவீக்கம் 82,700 சதவீதத்தை எட்டியது.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 லட்சம் பொலிவர்கள் செலவிட வேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவர்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

குழந்தைகள் அணியும் நேப்பிஸ் விலை 80 லட்சம் பொலிவர்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: