திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை - போராடும் மக்கள்

  • 28 ஆகஸ்ட் 2018

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

பாலியல் தொழிலாளி கொலை

படத்தின் காப்புரிமை AFP

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பெருவியன் திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது வாடிக்கையாளரிடம் திருட வந்த திருடர்களிடமிருந்து அவரை காப்பாற்ற முயற்சித்தபோது கொள்ளையர்கள் அவரை தாக்கி உள்ளனர். கொலையான பாலியல் தொழிலாளியின் பெயர் வனிஸா. அவருக்கு நீதி கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

பொருளாதார தடையை நீக்கு

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்கா தம் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை நீக்கும்படி இரான் சர்வதேச நீதிமன்றத்தை நாடி உள்ளது. இரான் வழக்கறிஞர் மெசன் மெஹாபி இரான் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்குத்துடன் அமெரிக்கா செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஊபரில் 500 மில்லியன் டாலர் முதலீடு

படத்தின் காப்புரிமை Getty Images

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடா ஊபர் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது. ஊபர் நிறுவனம் மோசமான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த முதலீடானது நிறுவனத்தின் மதிப்பை 72 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்தும்.

காலராவை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

ஏமன் நாட்டில் காலராவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் புதிய தொழில்நுட்பமானது பேருதவி புரிந்துள்ளது. எந்த இடத்தில் காலரா பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தொழில்நுட்பம் கொண்டு கணிக்கும் முறைதான் இப்படியான நல் விளைவுகளை தந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 50,000 பேருக்கு காலரா பரவியது. ஆனால், இப்போது 2500 பேருக்கு மட்டுமே காலரா உள்ளது.

ஒன்பது வயது சிறுவனை கிண்டல்

படத்தின் காப்புரிமை CBS

ஓரினச் சேர்க்கை விருப்பம் கொண்டவராக இருப்பதற்காக நான்கு நாட்களாக ஒன்பது வயது சிறுவனை கேலி செய்ததால் அந்த சிறுவன் தன்னைதானே மாய்த்துக் கொண்டுள்ளான். தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுவனின் பெய்ர் ஜமெல் மயில்ஸ். ஜமெலின் தாய் லியா, "தன்னை தானே மாய்த்துக்கொள்ளும்படி தன்னுடன் படிக்கும் சக மாணாவர்கள் கூறியதாக ஜமெல் அவன் மூத்த சகோதரியிடம் கூறி உள்ளான்" என்கிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்