பொம்மை துப்பாக்கியை வைத்து நிஜ துப்பாக்கியை திருடிய திருடர்கள் - சுவாரஸ்ய சம்பவம்

பராகுவேயில் போலீஸாரிடமிருந்து 42 நிஜ துப்பாக்கிகளை திருடி அதற்கு பதிலாக பொம்மை துப்பாக்கிகளை வைத்துச் சென்றுள்ளனர் திருடர்கள்.

பராகுவே

பட மூலாதாரம், Getty Images

ஆயுத கிடங்கில் சோதனைக்கு சென்ற பிறகு அங்கு மரத்தால் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கள்ளச் சந்தையில் 10டாலர்கள் வரை துப்பாக்கிகள் விற்பனையானதற்கு பிறகு ஆயுத கிடங்கில் சோதனைகள் தொடங்கப்பட்டன

அந்த ஆயுதங்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தாலும் செயல்படும் நிலையில்தான் இருந்தன.

எடுத்துச் செல்லப்பட்ட சில துப்பாக்கிகள் அர்ஜென்டினாவில் இருக்கலாம் என்றும் சில பிரேசிலுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அண்டை நாடான பிரேசில், பல காலங்களாக அங்கு பறிமுதல் செய்யப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் பராகுவேயிலிருந்து கடத்தப்பட்டவை என புகார் தெரிவித்து வருகிறது.

போலி துப்பாக்கிகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பராகுவே போலீஸார் இது `மிகவும் அவமானத்திற்குரியதொரு திருட்டு` என தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிகள் முதன்முறையாக கள்ளச் சந்தையில் வந்தவுடன், ராணுவம் அதுகுறித்த சோதனைக்கு ஆணையிட்டது.

அதன்பின் அவர்கள் போலீஸாரின் ஆயுதக் கிடங்கில் சோதனையிட்டபின் அந்த பிளாஸ்டிக் துப்பாக்கிகளை கண்டறிந்தனர்.

இந்த துப்பாக்கிகள் தலைநகரில் உள்ள ஆயுதக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் இதற்கு பதிலாக புதிய துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட ஆயுதங்களை காவல் காக்கும் பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டார் ஆனால் இதுகுறித்து கைதுகள் ஏதும் செய்யப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :