3 லட்சம் வீரர்கள், மூன்று நாடுகள்: மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா

  • 29 ஆகஸ்ட் 2018

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா

படத்தின் காப்புரிமை Reuters

ரஷ்யா மிகப்பெரிய ராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் இந்த ராணுவ பயிற்சியில் ஏறத்தாழ 3 லட்சம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டு பனி போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ராணுவ பயிற்சி இது. இதில் சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளிலிருந்து துருப்புகள் கலந்து கொள்ள இருக்கின்றன. நாஃபோவுக்கும் ரஷ்யாவுக்கும் முரண்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ரஷ்யா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைத்துறை நடவடிக்கை இதுவாகும்.

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது செய்து கொண்டிருக்கும் பணியை விட சிறந்த வேலையை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் விமான போக்குவரத்து துறையில் பணி தேடலாம். ஆம், ஆசியா பசிஃபிக் பகுதியில் மட்டும் விமான போக்குவரத்து துறையில் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் உருவாகும் என போயிங் கணித்துள்ளது. 2037 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பகுதியில் 240,000 பைலட் தேவைப்படுவார்கள் என கணிக்கிறது போயிங்.

நடுக்கடலில் சண்டை

படத்தின் காப்புரிமை EVN/FRANCE TÉLÉVISION

நடுக்கடலில் பிரிட்டன் மீனவர்கள் மீது பிரான்ஸ் மீனவர்கள் கற்கள், புகை குண்டுகள் வீசினார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவமானது நார்மண்டி கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் தொலைவில், சீன விரிகுடாவில் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியின் பிரிட்டன் படகுகளுக்கே மீன்பிடி உரிமை உள்ளது.

அனைத்து தரப்பிலும் போர் குற்றம்

படத்தின் காப்புரிமை Reuters

ஏமன் பிரச்சனையில் அனைத்து தரப்பினரும் போர் குற்றம் செய்திருப்பதாக தாங்கள் நம்புவதாக ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் ஏமன் அரசு படைகளையும், அவர்களை ஆதரிக்கும் செளதி தலைமையிலான கூட்டணி படைகளையும் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதே நேரம், ஹூதி கிளர்ச்சியாளர்கள் மக்கள் பலியாவதை தடுக்க சிறு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசியல் விருப்பு வெறுப்புகள்

படத்தின் காப்புரிமை EPA

கூகுள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.`டிரம்ப் நீயூஸ்` என்ற தேடல் வார்த்தைக்கு கூகுளில் ஒருதலைபட்சமான செய்திகள் வருவதாக தெரிவித்த டிரம்ப் அவர்ளை கடுமையாக எச்சரித்துள்ளார். ஒழுங்கு நடைமுறைகள் குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.ஆனால் கூகுள் தேடு தளத்தை எந்த அரசியல் விருப்பு வெறுப்பு சார்ந்தும் வடிவமைக்கவில்லை என்றும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :