ரோஹிஞ்சா பிரச்சனை: 'ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும்'

கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிறைவு செய்கிற ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மியான்மரிலுள்ள இன சிறுபான்மையினரில் ஒன்றுதான் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

"ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டை குறைக்க முற்பட்டதைவிட வீட்டுக்காவலில் இருக்க மீண்டும் திரும்புவதை நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்" என்று அல் ஹூசைன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இனப்படுக்கொலை தொடர்பாக மியான்மர் ராணுவம் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

பிரசவித்த கைக்குழந்தையுடன் ரோஹிஞ்சா சிறுமிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரசவித்த கைக்குழந்தையுடன் ரோஹிஞ்சா சிறுமிகள்

இந்த அறிக்கையை ஒருதலைபட்சமானது என்று மியான்மர் நிராகரித்துள்ளது.

பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மர் நாட்டின் ராணுவம் திட்டமிட்டு இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் எந்தவொரு தவறுகளையும் செய்யவில்லை என்று மியான்மர் ராணுவம் மறுத்துவிட்டது.

திங்கள்கிழமை வெளியான ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை, ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் நீண்டகால தலைவரான ஆங் சான் சூச்சி இந்த வன்முறையை தடுக்க தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

"ஏதாவது செய்யக்கூடிய நிலையில் அவர் இருந்தார்" என்று பிபிசியின் இமோகன் ஃபௌல்கஸூக்கு பேட்டியளித்த ஹூசைன், "அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சொன்னால், அவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

"மியான்மர் ராணுவத்தின் சார்பாக பேச வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. தவறான தகவல்களின் பெரியதொரு பனிப்பாறையே உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் புனையப்பட்டவை என்று சூச்சி சொல்லியிருக்க வேண்டியதில்லை" என அவர் கூறியுள்ளார்.

"நான் பெயரளவில் நாட்டின் தலைவராக இருக்க தயாராக உள்ளேன். ஆனால், இந்த நிபந்தனைகளின் கீழ் அல்ல. எனவே, மிக்க நன்றி. நான் பதவி விலகுகிறேன். வீட்டுச் சிறைக்கு திரும்புகிறேன். இந்த வன்முறைகள் நடந்திருப்பதற்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பிறர் நினைக்கலாம் என்று சூச்சி கூறியிருக்க வேண்டும்" என்றார் ஹூசைன்.

பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள்

73 வயதாகும் ஆங் சான் சூச்சி 1989 முதல் 2010ம் ஆண்டுக்குள் ராணுவ ஆட்சியின்போது 16 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்தார்.

1991ம் ஆண்டு ஆங் சான் சூச்சிக்கு வழக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்ப பெற முடியாது என்று நோபல் பரிசு குழு புதன்கிழமை தெரிவித்தது.

ரோஹிஞ்சா அகதிகளுடன் 4 நாட்கள் செலவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரோஹிஞ்சா முகாமில் ப்ரியங்கா சோப்ரா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :