மியான்மர் கடற்பகுதியில் மிதக்கும் 'பேய் கப்பல்'

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

மியான்மர் கடற்பகுதியில் மிதக்கும் 'பேய் கப்பல்'

படத்தின் காப்புரிமை YANGON POLICE/FACEBOOK

மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டுபிடித்ததையடுத்து, போலீஸார் அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று தேடி வருகின்றனர்.

"சாம் ரடுலங்கி PB 1600" என்று பெயர் எழுதப்பட்டிருந்த அக்கப்பல் மியான்மரின் தலைநகர் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியாக மிதந்து கொண்டிருந்தது இந்த வார தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

"அக்கப்பலில் மாலுமிகளோ அல்லது பொருட்களோ ஏதுமில்லை" என்று யங்கூன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளவரசி டயானாவின் ஆடை வடிவமைப்பு விற்பனை

படத்தின் காப்புரிமை GETTY IMAGES/ RRAUCTIONS/BNPS

1986ஆம் ஆண்டு இளவரசி டயானா, வளைகுடா பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்காக புர்கா ஒன்று வடிவமைக்கப்பட்டது. அந்த வடிவமைப்பானது, அடுத்த மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் சில ஆடை வடிவமைப்புகளோடு, துணி மாதிரிகளும் ஏலம் விடப்பட உள்ளது. டயானாவின் திருமண ஆடையை வடிவமைத்து தந்த டேவிட் மற்றும் எலிசபெத் இமானுவெல் கடையில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்த பொருட்கள் அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.

ஒப்பந்தந்தை எட்டாமல் முடிந்த பேச்சுவார்த்தை

படத்தின் காப்புரிமை AFP

வட அமெரிக்க சுதந்திர வணிக ஒப்பந்தத்தை (நாஃப்தா) திருத்தம் செய்ய அமெரிக்க மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்த ஒப்பந்தத்தையும் எட்டாமல் முடிந்துவிட்டது.

அடுத்த வாரம், மீண்டும் கனடா நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்ததை எட்ட முயற்சிகள் எடுக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி உதவி நிறுத்தம்

படத்தின் காப்புரிமை Reuters

ஐ.நாவின் பாலத்தீனிய அகதி முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை "சரிசெய்யமுடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக" அமெரிக்கா தெரிவித்துள்ளது. "அமெரிக்க நிர்வாகம் இந்த விஷயத்தை கவனமாக மறுஆய்வு செய்தது, இதற்கு மேலும் ஐ.நாவின் மீட்புப் பணி முகமைக்கு நிதியுதவி அளிக்க முடியாது" என செய்தி தொடர்பாளர் ஹீதர் நவட் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனிய அதிபர் மகமூத் அபாஸின் செய்தி தொடர்பாளர் இது பாலத்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட "தாக்குதல்" என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :