பாகிஸ்தானியர்களுக்கு செளதி அரேபியாவில் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏன் ?
- பிபிசி இந்தி சேவைப்பிரிவு
- டெல்லி
பாகிஸ்தானியர்களுக்கு செளதி அரேபியாவில் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் செளதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். அங்கிருந்து அவர்கள் அனுப்பும் பணம், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு வலுவூட்டுகிறது.
கடந்த வெள்ளியன்று ரியாதில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்ற பாகிஸ்தானுக்கான செளதி அரேபிய தூதர் நவாஃப் பின் சயீத் அல்-மலிக், பாகிஸ்தான் தூதர் கான் ஹஷம் பின் சதிக்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை பாகிஸ்தான் தூதர் முன்வைத்தார்.
இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்று இருதரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர்.
செளதி அரேபியாவில் தெற்காசியாசியர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். அதிலும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்க தேசத்தினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதைத்தவிர, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் மக்களும் செளதியில் கணிசமான அளவு பணிபுரிகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இந்த பிராந்தியங்களை சேர்ந்தவர்களுக்கான விசாக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, செளதி அரேபியாவில் இருந்து பலர் வேலைகளை விட்டு வெளியேறுகின்றனர்.
''2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை சுமார் ஆறு லட்சத்து 67 ஆயிரம் வெளிநாட்டினர் வேலையையையும், செளதியையும் விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எண்ணிக்கை'' என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் வளத்தையே பொருளாதரத்தின் அடிப்படையாக கொண்ட செளதி அரேபியாவில் எண்ணெய் துறையில் வேலை செய்பவர்களில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. மூன்று கோடியே 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட செளதி அரேபியாவின் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டினர் என்பதும், இங்கே தனியார் துறையில் பணிபுரிபவர்களில் 80 சதவிகிதத்தினர் வெளிநாட்டினரே என்பதும் குறிப்பிடத்தக்கது.''
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரசராக தேர்ந்தெடுக்கப்பட்டமுகம்மது பின் சல்மான், நாட்டின் பொருளாதாரத்தை மாறுபட்ட கோணத்தில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனியார் துறையில் செளதி குடிமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் அவரது திட்டங்களில் ஒன்று.
பட மூலாதாரம், Getty Images
கடுமையான விதிமுறைகள்
செளதி அரேபியாவில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் (சார்பு விசா பெற்றவர்கள்) செளதியில் குடியிருந்தால் நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 1,895 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ஓராண்டுக்கு முன்னதாக அமல்படுத்தியது. இந்தக் கட்டணமும் நிலையானதல்ல, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் மாதம் ஒன்றுக்கு 7,526 ரூபாய் என்ற அளவை எட்டும்.
நடப்பு ஆண்டு ஜூலை மாதக் கடைசி வாரத்தில், செளதி அரேபியாவின் வேலைவாய்ப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளிநாட்டினர்கள் பணியில் இருந்து விலகியதால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
அரசு வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் 12.9% வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. எந்தவொரு மாற்றத்தின் எதிர்வினைகளும் உடனடியாக தெரியாது, அதற்காக சிறிதுகாலம் எடுத்துக்கொள்ளும், இந்த விஷயத்திற்கும் அது பொருந்தும் என்று என்.எஸ்.பி.சியின் ஒரு ஆய்வு கூறுகிறது.
செளதி அரேபியா, பொருளாதாரத்திற்காக எண்ணெய் வளத்தையே சார்ந்திருப்பதை மாற்ற விரும்பும் பட்டத்து இளவரசர் சல்மான், 2020ஆம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பின்மையை 9 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
செளதியில் அதிகரித்துவரும் வேலையின்மை
ரியாதில் அல் ரஜ்ஹி கேபிடல் என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் மோஜேன் அல்-சதாயிரி இவ்வாறு கூறுகிறார்: "செளதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 53 சதவீதத்தினர், மாதந்தோறும் 3,000 ரியாலுக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கட்டுமானத் துறையில் புரிபவர்கள்."
செளதி அரேபியாவின் புதிய விதிமுறைகள், அங்கு பணிபுரியும் பாகிஸ்தானிய தொழிலாளர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், பாகிஸ்தானுக்காக செளதி அரேபியா, எந்தவித சிறப்பு விதிகளையும் உருவாக்கவில்லை.
2016ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து செளதி அரேபியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை 11% வீழ்ச்சியடைந்துள்ளதாக, பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான டான் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசிய மேம்பாட்டு வங்கியின், 'ஆசியாவில் தொழிலாளர் இடம்பெயர்வு' என்ற ஆய்வறிக்கை ஒன்றின்படி, ''செளதி அரேபியாவில் பணிபுரியும் பாகிஸ்தானியர்களைவிட, வங்கதேசத்தினரின் எண்ணிக்கை அதிகம். ஆறு ஆண்டுகளாக வங்கதேச தொழிலாளர்களுக்கு தடை விதித்திருந்த செளதி அரசு, 2016 மத்தியில் அந்த தடையை விலக்கிக் கொண்டதே இதற்கு காரணம்''.
பட மூலாதாரம், Getty Images
முகம்மது பின்-சல்மானின் கடுமையான விதிமுறைகள்
'த எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்' என்ற பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, செளதியில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள், தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், அந்த நிலை தற்போது மாறிவிட்டது.
இந்த விஷயத்தில், வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமே பாகிஸ்தானுக்கு அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் பிரதான நாடு. இந்த அறிக்கையின்படி, 2018 ஜனவரியில், செளதி அரேபியாவில் இருந்து 38 கோடியே 40 லட்சம் டாலர்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% குறைவு.
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளில்தான் பாகிஸ்தானியர்கள் மிகவும் அதிக அளவில் பணிபுரிகின்றனர். 2015-16 நிதியாண்டில் இந்த இரு நாடுகளிலும் பணியாற்றிய பாகிஸ்தானியர்கள், தங்கள் தாயகத்திற்கு 19 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் வெளிநாட்டில் வேலை செய்யும் பாகிஸ்தானியர்கள் அனுப்பும் தொகை முக்கியமானது. இதில் ஏற்படும் குறைவு, பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு வெறும் ஒன்பது பில்லியன் டாலர்கள் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள் எப்போதும் சுமூகமானதாகவே இருந்திருக்கிறது. 1960ஆம் ஆண்டிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் தொடங்கிவிட்டன. இதே காலகட்டத்தில்தான் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டன. செளதிக்கு, பாகிஸ்தான் நீண்ட காலமாக ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதற்கு பதிலீடாக, செளதி அரேபியா, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவுகிறது.
பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவில் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள்
20 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள், செளதி அர்ரேபியாவில் பணியாற்றுவதாக 'அரப் நியூஸ்' பத்திரிகையின் ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்கள் ஆண்டுதோறும் ஏழு பில்லியன் டாலர் அளவிலான பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்புகின்றனர்.
பொதுவாகவே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் நிரந்தர எதிரியோ அல்லது நிரந்தர நண்பரோ கிடையாது என்று கூறுவதுண்டு. அதாவது உறவுகள் எப்போதுமே நிலையாக இருக்காது, தன்நலனில் அடிப்படையிலேயே இருக்கும். தற்போது, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியாவின் உறவுகளிலும் இப்போது அது எதிரொலிக்கிறது.
2015இல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏமனுக்கு எதிராக செளதி ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டபோது, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனம் வெளியிடப்பட்டது. இரானுக்கு எதிராக செளதி அரேபியா செயல்படுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இரானுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் இம்ரான் கான் தெளிவாக கூறிவிட்டார். செளதி மற்றும் இரான் இடையிலான விரோதத்தில் ஷியா மற்றும் சுன்னி பிரிவினர் தொடர்பான பிரச்ச்னை பிரதானமானது.
பாகிஸ்தான் மக்கள்தொகையில் குறைந்தது 15 சதவிகிதத்தினர் ஷியா முஸ்லிம்கள். எனவே, செளதியுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வது பாகிஸ்தானுக்கு சாத்தியமானதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்காது. செளதி அரேபியா மற்றும் இரானுடன் சுமூகமான உறவுகளை மேற்கொள்ளவிருப்பதாக, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் தெளிவாக கூறிவிட்டார்.
இந்தியா-செளதி அரேபியா இடையே சுமூகமாகும் உறவுகள்
1990ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகள் வியத்தகு முறையில் மேம்படுத்தப்பட்டது. 2014இல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோதி, செளதி அரேபியாவிற்கு இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பட மூலாதாரம், MEA TWITTER
இதன் விளைவாக, இந்தியாவுக்கான செளதியின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்த்து. அதுமட்டுமல்ல, செளதி அரேபியாவிற்கு பணிபுரிய செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவுக்கு நெருக்கமான நட்பு நாடு இரான் என்றாலும், இரானின் மீது, அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்த பிறகு, இந்தியாவுக்கான செளதியின் நிதி பங்களிப்பு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக, இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் செளதி அரேபியா மாறியது. இதற்கு முன்னர், இராக் தான் இந்தியாவுக்கு அதிக அளவிலான எண்ணெய் ஏற்றுமதி செய்துவந்தது.
பட மூலாதாரம், AFP
இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், அண்மையில் நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பிய அறிக்கையில், இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை குறைக்க தயாராக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, இந்தியப் பொருளாதாராத்திற்கு செளதி அரேபியா முக்கியமான நாடாக மாறிவிட்டது. எதிர்வரும் மாதங்களில் செளதி அரேபியாவின் பங்களிப்பு மேலும் அதிகமாகலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும்
"செளதியும் அமெரிக்காவும் இயல்பான நண்பர்களல்ல, ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பதில் தயக்கம் காட்டாது. இரு தரப்பும் பரஸ்பர நலனுக்காக மற்றொன்றை பயன்படுத்திக் கொள்கின்றன."