பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட நடிகை ஜூடி கார்லாண்டால் அணிந்த செருப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

செருப்புக்கான ஒரு தேடல்

பட மூலாதாரம், Getty Images

தி விஸார்ட் ஆஃப் ஓசெட் படத்தில் ஜூடி கார்லாண்டால் அணியப்பட்ட மாணிக்க செருப்பு ஒன்று பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ளது. மின்சோடா அருங்காட்சியகத்திலிருந்த இந்த செருப்பினை, 2005 ஆம் ஆண்டு, சிலர் ஜன்னல்களை உடைத்து திருடினர். இந்த செருப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தருவதாக ஒருவர் அறிவித்து இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அதிபராக இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர் தேர்வு

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆரிப் ஆல்வியின் தந்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக இருந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், AFP/Getty Images

இராக் பாஸ்ராவில் நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 14 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பாஸ்ரா மக்கள் போராடி வருகின்றனர்.

சமூக ஊடகத்தில் கிண்டல்

பட மூலாதாரம், AFP

சமூக ஊடகத்தில் மத நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பொது ஒழுக்கம் மற்றும் அரசு ஆணைகளை கிண்டல் செய்து பதிவிட்டால் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என செளதி அரசு தரப்பு கூறி உள்ளது. இதற்கு அபராதமாக எட்டு லட்சம் டாலரும் விதிக்கப்படும் என்கிறது அரசு தரப்பு.

அமெரிக்காவில் புயல்

பட மூலாதாரம், Getty Images

வெப்பமண்டல புஅயல் கோர்டோன் அமெரிக்க வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்வதை அடுத்து லூசியானா மற்றும் மிசிஸ்சிபி ஆகிய மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

தேசிய சூறாவளி மையம் இந்த புயலானது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வரும் என்று எச்சரித்துள்ளது. நிலத்தை வந்தடைவதற்கு முன் இந்த புயலின் வேகம் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

ஜப்பானை தாக்கிய கடும் சூறாவளி

பட மூலாதாரம், EPA

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் மிக பயங்கர மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மிக பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள்  விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :