டிரம்பிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முயற்சி?

அதிபர் டிரம்பின் மோசமான நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிபரின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகள் நடைபெறாமல் இருக்க நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்

பட மூலாதாரம், Alex Edelman- Pool/Getty Images

அதிபர் டிரம்ப்பின் "இரக்கமற்ற தன்மை" மற்றும் "தொலைநோக்கில்லாத செயல்பாடு" ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன என்று நியூ யார்க் டைம்ஸ் தலையங்கத்தில் கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார்,

பெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பெயரின்றி எழுதியிருக்கும் இந்த மர்ம எழுத்தாளர் கோழை என்று தெரிவித்திருக்கும் அதிபர் டிரம்பின் செய்தி தொர்பு செயலர், இதனை எழுதியர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதை பொது மக்களின் புரிதலை கூட்டியுள்ள இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளதில் மிகவும் பெருமைப்படுவதாக கூறி டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த தலையங்கத்தை நியாயப்படுத்தியுள்ளது.

பாப் வுட்வாட்டு எழுதிய புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் வெளியான ஒரு நாளுக்கு பின்னர் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது.

அமெரிக்காவை அதிபரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, அதிபர் டிரம்ப் கையெழுத்திடுவதற்கு முன்னால், முக்கிய ஆவணங்களை அவருடைய மேசையில் இருந்து நீக்கிவிடுவது உள்ளிட்ட "நிர்வாக ஆட்சி சதி"-யில் டிரம்பின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிடுவதாக இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்படுகிறது.

தான் (அவர் / அவள்) முற்போக்காக செயல்படுகிறவர் அல்ல என்று தெரிவித்திருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியர் டிரம்பின் நிர்வாகம் செயல்படுத்தும் கொள்கை இலக்குகள் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார். ஆனால், இந்த இலக்குகள் எல்லாம் அதிபரால் நடைபெறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் கொள்கையில் மாற்றம்

காணொளிக் குறிப்பு,

டிரம்ப் கொள்கையில் மாற்றம்: குடும்பங்களை பிரிப்பதைவிட சேர்ப்பதில் செலவு குறைவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :