கிராண்ட் ஸ்லாம் போட்டி: நடுவரை 'திருடன்' என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கிராண்ட் ஸ்லாம் போட்டி: நடுவரை திருடன் என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க்கில் நடந்த யூ.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில், பிரபல வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நடுவரை 'திருடன்' என்று கூறியதையடுத்து, ஜப்பானின் நெயோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

தன் கோபத்தை வெளிப்படுத்திய செரீனா, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார் பின் அவருக்கு பெனால்டி வழங்கப்பட்டது. செரீனா ஆட்ட விதிகளை மீறியதையடுத்து, 6-2, 6-4 என்ற கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.

20 வயதாகும் ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் ஜப்பானியர் ஆவார். போட்டி முடிந்தவுடன் நடுவரான கார்லொஸ் ரமோசுடன் கைக்குலுக்கவும் செரீனா வில்லியம்ஸ் மறுத்துவிட்டார்.

வட கொரியாவின் 70வது ஆண்டு விழா

பட மூலாதாரம், Getty Images

வட கொரியா, தனது 70வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்புடன், முதன் முதலாக பெரிய விளையாட்டு போட்டிகளையும் நடத்த தயார் செய்து கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வார இறுதியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

வட கொரியாவின் ஆயுதக்கிடங்குகள் மற்றும் அணுஆயுதமற்ற பகுதியாக்க அந்நாடு அளித்த உறுதி ஆகியவற்றிற்கான குறிப்புகள் இந்த அணிவகுப்பில் கூர்ந்து கவனிக்கப்படும்.

பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு

பட மூலாதாரம், EPA

கலிஃபோர்னியாவில் அடுத்த வாரம் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் சூழலியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மற்றும் பிரபலங்கள் என அடுத்த வாரம் நடைபெற உள்ள உலகளாவிய பருவநிலை குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு ஐ.நா, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன.

கொள்கை தோல்விகளால் ஃபிரான்ஸின் சூற்றுச்சூழல் அமைச்சர் விலகியதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் தாக்குதல்

பட மூலாதாரம், AFP

இட்லிப்பின் மேற்கு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீது சிரியாவும் ரஷ்யாவும் தீவிரமான விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இட்லிப்பின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளோடு எல்லையில் உள்ள ஹமா மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான இட்லிப், சிரிய அரச படைகளால் ரஷ்யாவின் துணையோடு தாக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :