விண்மீன்களுக்கு நடுவே ஓர் எரிமலை: சிலி அற்புதம்

கடந்த வாரம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்கள் மூலம் அறிவோம்.

'பிரேசில் சோகம்'

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பழமையான தேசிய அருங்காட்சியம் தீயில் நாசமாகியது. 1818ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், பிரேசிலின் மிகப்பெரிய விண்கல், டைனாசரின் எலும்புக்கூடுகள், 12,000 வருடங்கள் பழமை வாய்ந்த 'லூசியா' என்ற பெண்ணின் எலும்புக்கூடு போன்றவை அங்கு இருந்தன

எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 6) தீர்ப்பளித்தது. ஒருபாலின உறவை தண்டனைக்குரிய குற்றமல்ல என்றது அந்தத் தீர்ப்பு.

இரவில் எரிமலை

கடந்த வாரம் சர்வதேச அளவில் அதிகம் புகழப்பட்ட புகைப்படம் இரவில் எடுக்கபட்ட இந்த எரிமலை புகைப்படம்தான். சிலி புகான் நகரத்தில் உள்ளது இந்த எரிமலை.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் கடந்த வாரம் 6.7 அளவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட சாலையில் நடந்துவரும் பெண்.

கொசாவா அலங்காரம்

திருமணத்திற்காக முகத்தில் வண்ணம் பூசும் கொசாவா பெண். கொசாவா வழக்கப்படி, திருமணத்தின் போது வாழ்வின் பல்வேறு படிநிலைகளை விளக்கும் ஓவியத்தை முகத்தில் வரைவார்கல். இந்த வழக்கமானது மெல்ல அழிந்து வருகிறது.

ஓய்வில் மான்கள்

ஐர்லாந்து டப்ளினில் உள்ள ஃபீனிக்ஸ் பூங்காவில் ஓய்வெடுக்கும் மான்கள்.

திறந்தன பள்ளிகள்

சீனா ஷாங்காய் மாகாணத்தில் விடுப்பு முடிந்து பள்ளி திரும்பிய குழந்தைகள் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

இலங்கை சத்தியாகிரகம்

இலங்கை அதிபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :