ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தங்க பாறை

படத்தின் காப்புரிமை RNC MINERALS

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள். பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பத்தாண்டுகளில் மோசமான புயல்

படத்தின் காப்புரிமை NOAA

அமெரிக்க கிழக்கு கடல் பகுதியை பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ அணிவகுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ராணுவ அணிவகுப்புக்கான பணிகளை ரஷ்யா துரிதப்படுத்தி உள்ளது. பனி போருக்குப் பின் ரஷ்யாவில் நடக்கும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இதுவாகும். கிழக்கு சைபீரியாவில் நடக்க இருக்கும் இந்த அணிவகுப்பில் 3 லட்சம் படை வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள். சீனா 3200 துருப்புகளை அனுப்புகிறது. மங்கோலியாவும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள படைகளை அனுப்புகிறது. நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்குமான முரண்கள் வளர்ந்து வரும் இந்த சூழலில் இந்த அணிவகுப்பு நடக்க இருக்கிறது.

ஆப்கன் பெரும் சண்டை

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தானின் நான்கு மாகாணத்தில் நடந்து வரும் சண்டையில் டஜன் கணக்கான ஆப்கன் பாதுகாப்பு படை வீரர்களும், தாலிபன்களும் மரணமடைந்துள்ளனர். அதிக படைகளை கொண்டு எதிர்கொள்ளாவிட்டால் சர் -இ -புல் மாகாணத்தின் தலைநகர் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆப்கன் அதிகாரிகள். அந்த நாட்டின் அமைதியை கொண்டு வருவதற்கான ராஜாங்க பேச்சுவார்த்தை முற்று பெற்றதை அடுத்து தாலிபன்களுக்கும் அரசு தரப்புக்கும் சண்டை மூண்டுள்ளது.

அமெரிக்கா அச்சுறுத்தல்

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களை கொடுமை செய்தது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க நீதிமன்றம் யோசனை செய்து வருகிறது.இந்த நீதிமன்றம் "சட்டவிரோதமானது" என்றும் "எங்கள் குடிமக்களை பாதுகாக்க எது வேண்டுமானலும் செய்வோம்" என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நீதிமன்றத்தில் சேராமல் இருக்கும் டஜன் கணக்கான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :