செரீனா குறித்த 'சர்ச்சை கார்ட்டூன்' - இதில் என்ன தவறு? - வினவிய பத்திரிக்கை

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

செரீனா குறித்த சர்ச்சை கார்ட்டூன் - என்ன சொன்னது பத்திரிக்கை?

படத்தின் காப்புரிமை Reuters

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் சித்தரிப்புக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான 'ஹெரால்ட் சன்' மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

பிரபல கார்ட்டூன் கலைஞரான மார்க் நைட் வரைந்த அந்த ஓவியம் , ஒரு குழந்தை போல உடைந்த தனது ராக்கெட்டுக்கு அருகில் குதித்து குதித்து செரீனா அழுவது போல இருந்தது.

இந்த கார்ட்டூன் குறித்து விமர்சித்தவர்கள் இனவாத மற்றும் பாலியல் பாகுபாடு கொண்ட பிம்பங்களையும், எண்ணங்களையும் இந்த கார்ட்டூன் வெளிப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினர்.

படத்தின் காப்புரிமை MARK KNIGHT/AFP

ஆனாலும், இந்த விமர்சனங்கள் மேற்கூறிய படம் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இடம்பெறுவதை தடுக்கமுடியவில்லை.

அச்சுறுத்தும் சூறாவளி - அச்சத்தில் அமெரிக்க மாகாணங்கள்

படத்தின் காப்புரிமை EPA
Image caption சூறாவளி அச்சத்தால் வெளியேறும் மக்கள்

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்கலில் கடந்த 3 தசாப்தங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் ஃபுளோரன்ஸ் சூறாவளி வலுப்பெறும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கேட்டலோனியா போராட்டங்கள் : ஓராண்டு நிறைவு - வீதிகளில் திரண்ட மக்கள்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப்படம்

கேட்டலோனியாவின் தேசிய நாளை குறிக்கும் வகையில், பார்சிலோனா நகர வீதிகளில் ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் திரண்டு கேட்டலோனியாவின் விடுதலைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

கடந்த ஆண்டு (2017) அக்டோபரில் ஸ்பெயின் நாட்டில் இருந்து தனி நாடாக பிரிவதற்கு கேட்டலோனியா ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிகள் தொடங்கின. ஓராண்டு ஆகிவிட்ட இந்த முயற்சி அப்போது தோல்வியில் முடிந்தது.

தற்போது வீதிகளில் நடந்த பேரணி ஏறக்குறைய கடந்த ஆண்டு திரண்ட கூட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

மரியா சூறாவளி : டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை AFP/GETTY

பியார்ட்டோ ரீகோவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மரியா சூறாவளியின்போது அமெரிக்காவின் செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை புகழ்ந்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பியார்ட்டோ ரீகோவின் தலைநகரின் மேயர் இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சூறாவளி தாக்கி 11 மாதங்கள் கழித்து கடந்த மாதத்தில்தான் நாணத்தில் முழுவதுமாக மின்சார வசதிகள் சீர் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :