சீனாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்

HIV/Aids படத்தின் காப்புரிமை Science Photo Library

தங்கள் நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளதாக சீனா கூறியுள்ளது.

சீனாவில் எச்.ஐ.வி - எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 8,20,000 என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 40,000 பேருக்கு புதிதாக எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நோய்த் தொற்று உள்ள ரத்தத்தை முறையாகப் பரிசோதனை செய்யாமல் உடலில் செலுத்தப்படுவதால் எய்ட்ஸ் பரவுவது அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பாதுகாப்பற்ற உடலுறவே முக்கியக் காரணம் என்று தெரிவிக்கட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக சீனாவில் எய்ட்ஸ் நோயுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் சதவீதம் அதிகரித்து வருகிறது.

சீனாவில் ஒருபாலுறவினர் மற்றும் பிற பாலின சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாலுறவு மூலம் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

அங்கு 1997ஆம் ஆண்டே ஒருபாலுறவு குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பாலின சிறுபான்மையினர் அதிக பாரபட்சங்களை சந்தித்து வருகின்றனர்.

சீனாவில் நிலவும் பழமைவாதத்தால் ஒருபாலுறவில் ஈடுபடும் 70% முதல் 90% ஆண்கள் சமூக அழுத்தங்களால் பெண்களை திருமணம் செய்துகொள்கின்றனர். இத்தகைய திருமணங்களும் எய்ட்ஸ் பரவலுக்கு ஒரு காரணமாக உள்ளது.

2003இல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சீன அரசு உறுதி அளித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்