‘திருவிழா, போராட்டம்’ - இப்படித்தான் இருந்தது கடந்தவார உலகம்

கடந்த வாரம் உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக தொகுத்து வழங்குகிறோம்.

போராடும் பெண்கள்

படத்தின் காப்புரிமை TIMOTHY A. CLARY / AFP

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதை அடுத்து கடந்த வாரம் அமெரிக்காவில் பல இடங்களில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

திருவிழா

படத்தின் காப்புரிமை CLODAGH KILCOYNE/ REUTERS

அயர்லாந்தில் உள்ள க்ளார்கால்வே அரண்மனயில் நடைபெற்ற திருவிழாவில் துணிகளுக்கு எம்பிராய்டரி செய்யும் பெண்கள்.

சுனாமி பாதிப்பு

படத்தின் காப்புரிமை HOTLI SIMANJUNTAK / EPA

இந்தோனீசியாவில் 1400க்கு மேலானோரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று.

காற்று வாங்கும் நாய்குட்டி

படத்தின் காப்புரிமை ELOISA LOPEZ / REUTERS

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற விலங்குகளுக்கான அழகு நிகழ்ச்சி ஒன்றில் தன் நாய்க்கு மின்விசிறி வீசும் பெண்.

உள்கட்டமைப்பை மேம்படுத்து

படத்தின் காப்புரிமை GULSHAN KHAN / AFP

மோசமான உள்கட்டமைப்பு, வீட்டு வசதி மற்றும் போதை மருந்து ஆகியவற்றுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா ஜோக்னபெர்க் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

விண்வெளி பயணம்

படத்தின் காப்புரிமை MAXIM SHIPENKOV / AFP

ஆறுமாத விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமி திரும்பினர்.

50-வது நினைவு தினம்

படத்தின் காப்புரிமை CRISTOPHER ROGEL BLANQUET / GETTY

பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 50 வது நினைவு தினத்தை நினைவுக்கூரும் போராட்டத்தில் கடைகளை சேதமாக்கும் செயற்பட்டாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :