திருவிழாவில் பெண்ணை முட்டிக் கொன்ற காளை

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை EPA
Image caption கோப்புப்படம்

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள எக்-மோர்ட் நகரத்தில் உள்ளூர் விழா ஒன்றின்போது காளை முட்டி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கான் நகரைச் சேர்ந்த அப்பெண், தன் கணவருடன் சனிக்கிழமையன்று காளைப் பந்தையத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

பந்தையத்திற்கு பின் அங்கிருந்து சென்ற காளை ஒன்று, வேலியை தாண்டி குதித்ததில் அவர் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டார்.

தன் கொம்பால் அப்பெண்ணை முட்டிய காளை, அவரை தூக்கி எறிந்ததில் பல மீட்டர் தள்ளி சென்று விழுந்ததையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர், பின்பு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அத்தம்பதியினர் வேலி அருகே நிற்க வேண்டாம் என அங்கிருந்த பொதுமக்களால் பலமுறை எச்சரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்