புற்றுநோய் உள்ள நாயின் இறுதி நாட்களை அழகாக்கும் பெண்

Finn, with Cynthia Peterson, படத்தின் காப்புரிமை KATIE FIGURA PHOTOGRAPHY

அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தில் உள்ள பர்லிங்க்டன் நகரில் வசிக்கும் சிந்தியா பீட்டர்சன் தனது செல்ல நாயான ஃபின்னுக்கு புற்றுநோய் இருப்பதையும், அது மரணத்தை நெருங்கிக்கொண்டிருப்பதையும் அறிந்தபின் தனது கணவர் ராபர்ட் பீட்டர்சன் உடன் இணைந்து ஃபின் இறப்பதற்கு முன் அனுபவிக்க வேண்டிய கடைசி மகிழ்ச்சியான தருணங்களின் பட்டியலை உருவாக்கினார்.

தற்போது ஆறு வயதாகும் தனது வளர்ப்பு நாயின் கடைசி காலம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் சிந்தியா.

இப்போது ஃபின் கடலில் நீந்துவது, ஏர் பலூனில் பயணிப்பது, மாமிச விருந்து போன்ற கேளிக்கைகளை நிறைவு செய்துள்ளது. மேற்கொண்டு இன்னும் சில குதூகலங்களில் பங்கேற்க உள்ளது.

ஃபின் அனுபவித்த மகிழ்ச்சிகள் அனைத்தையும் சமூக ஊடகமான இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிந்தியா.

"மிகவும் மோசமான ஒரு அனுபவத்தை நாங்கள் உந்துதல் சக்தியாக மாற்றியுள்ளோம். புற்றுநோய் உடைய நாய்களை வளர்க்கும் உலகெங்கும் உள்ளவர்களுடன் நாங்கள் இப்போது நட்பு கொண்டுள்ளோம், " என்று பிபிசியிடம் தெரிவித்தார் 29 வயதாகும் சிந்தியா.

படத்தின் காப்புரிமை FINNANDYOGI
Image caption சிந்தியாவின் இன்னொரு செல்ல நாய் யோகியுடன் ஃபின்

#CanineCancerWarrior எனும் ஹேஷ்டேக் மூலம் உலகெங்கும் புற்றுநோயால் பாதிக்கப்ட்ட நாய்களை வளர்ப்பவர்களின் நட்பைத் பெற்றது தங்களுக்கு ஆறுதலாக உள்ளது என கூறுகிறார்.

2012இல் இணையதளம் ஒன்றின் மூலம் இந்த நாயை வாங்கிய சிந்தியா தன் இருபதுகளின் தொடக்கத்தில் ஃபின் தமக்கு ஒரு மிகவும் ஆதரவாக இருந்ததாக கூறுகிறார்.

"என் தந்தை இறந்த துக்கத்தைப் போக்கிக்கொள்ள ஃபின் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போது ஃபின்னும் இறக்கப்போகிறது," என்று வருத்தத்துடன் கூறினார் சிந்தியா.

படத்தின் காப்புரிமை FINNANDYOGI
Image caption தீயணைப்பு நிலையம் ஒன்றுக்கு ஃபின் மற்றும் யோகி சென்றிருந்தனர்.

ஃபின்னுக்கு பிடித்தமான மலையேற்றம் உள்ளிட்டவற்றை தன் பட்டியலில் சேர்த்தார் சிந்தியா.

தனது செல்ல நாயின் நினைவாக குழந்தைகளுக்கான நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளதுடன் அதன் நினைவாக பாடல் ஒன்றையும் எழுத உள்ளதாகக் கூறியுள்ளார்.

"அவனது கடைசி நாட்கள் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக இருக்க முயன்று வருகிறோம். அதற்கு எங்களால் இயன்ற அதிகபட்ச முயற்சிகளை செய்து வருகிறோம்." என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்