செல் ஒட்டு கேட்பா? அப்போ சீனா மாடல் பயன்படுத்துங்க- டிரம்பை கிண்டல் செய்த சீனா

Trump

பட மூலாதாரம், THE WHITE HOUSE

டிரம்ப் ஐபோன் ஒட்டுக்கேட்பு?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆப்பிள் ஐபோன் அழைப்புகளை சீனா மற்றும் ரஷ்யா ஒட்டுகேட்பதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா டிரம்ப்-ஐ பகடி செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளை பயன்படுத்துமாறு, சீனாவின் மறுப்பை தெரிவித்தபோது சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இந்த செய்தியை எழுதியவருக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி வாகனம்

பட மூலாதாரம், Reuters

ஜோர்டானில் சாக்கடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 கொல்லப்பட்டுள்ளனர்.

37 மாணவர்கள் மற்றும் ஏழு பள்ளி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற அந்தப் பேருந்து ஜாரா மயீன் வெண்ணீரூற்று உள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மீட்கப்பட்டுள்ளவர்களில் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

டென்னிஸ் வீராங்கனைக்கு முடக்குவாதம்

பட மூலாதாரம், Getty Images

டென்னிஸில் முன்னாள் உலக முதல் நிலை வீராங்கனை கரோலைன் வோஸ்னியாக்கி தமக்கு முடக்கு வாத நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

28 வயதாகும் டென்மார்க் வீராங்கனையான கரோலைன், இந்த உடல் நலக் கோளாறு இருப்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு: 48 பேரை நீக்கியுள்ள 'கூகுள்'

பட மூலாதாரம், Reuters

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 மூத்த மேலாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

தொழில் நுட்ப ஜாம்பவானான கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் சுந்தர் பிச்சை எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் மீது நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்தபோதிலும், பணிநீக்கத்துக்கு பிறகு நி கூகுள் றுவனத்தில் இருந்து 90 மில்லியன் டாலர்களை இறுதி ஊதியமாக அண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியவரான ஆண்டி ரூபின் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு பதிலுரையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரூபினின் சார்பாக அவர் தொடர்புடைய பேச்சளார் ஒருவர் மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :