இந்திய தொலைக்காட்சிகளை தடை செய்த பாகிஸ்தான் - ஏன், எதனால்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா பாகிஸ்தான்
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
அணையும், தடையும்
பட மூலாதாரம், Getty Images
கோப்புப் படம்
கீழமை நீதிமன்றம் ஒன்றின் உத்தரவுக்கு மாறாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்திய தொலைக்காட்சிகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அளித்த தலைமை நீதிபதி சாகிப் நிசார், பாகிஸ்தானுக்குள் வரும் நதிகளுக்கு குறுக்கே அணைகளை இந்தியா கட்டுகிறது என்று கூறி தனது தீர்ப்பை நியாயப்படுத்தி உள்ளார். அணைகளை இந்தியா ஆயுதமாக பயன்படுத்துகிறது என்கிறது பாகிஸ்தான்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுக்கிறது. முதல்முதலாக 1965ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரை தொடர்ந்து இந்திய திரைப்படங்களை பாகிஸ்தான் தடை செய்தது.
பதினொரு பேர் பலி
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி 46 வயதாகும் ராபர்ட் போவர்ஸ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவரும் காவல் துறையினர் சுட்டதில் காயமடைந்துள்ளதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐரிஷ் அதிபர்
பட மூலாதாரம், PA
ஐரிஷ் அதிபர்
ஐரிஷ் அதிபராக மீண்டும் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இரண்டாவது இடத்திற்கு தொழிலதிபரான பீட்டர் காசி வந்தார். அவர் பெற்ற வாக்கு சதவீதம் 23.1%. களத்தில் இருந்த பிற வேட்பாளர்கள் 10 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
பட மூலாதாரம், LIAM HOPKIN / @HOPKIN_LIAM
பிரிட்டன் லெஸ்டர் நகர கால்பந்து உரிமையாளரின் ஹெலிகாப்டர் சற்று நேரத்திற்கு முன் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான போது அணியின் உரிமையாளர் வீட்சை சீவடனபிரபா ஹெலிகாப்டரின் இருந்தாரா என தெரியவில்லை.
கிங் பவர் மைதானத்தில் லெஸ்டர் அணி வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு எதிராக பிரீமியர் லீக் ஆடியது. லீஸ்டர் அணியின் கோல் கீப்பர் காஸ்பர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை நோக்கி ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவிக்கிறார்.
'உள்கட்டமைப்பை மேம்படுத்து'
பட மூலாதாரம், AFP/ Getty Images
உள்கட்டமைப்பை மேம்படுத்த கோரி ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி தலைநகரமான ரோமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நகர் மன்றத்திற்கு வெளியே கூடிய மக்கள் மேயர் வெர்ஜினியா ராகிக்கு எதிராக கோஷமிட்டனர்.
பட மூலாதாரம், AFP/Getty Images
குறிப்பாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை. ரோம் நகரத்தின் முதல் பெண் மேயர் வெர்ஜினியா ராகி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :