உலகை உலுக்கிய காட்சி: அகதிகளை எட்டி உதைத்த அந்த ஒளிப்பதிவாளரை நினைவிருக்கிறதா? - அவர் விடுதலை

ஹங்கேரி

பட மூலாதாரம், AFP

ஹங்கேரி - செர்பியா எல்லை வழியே, ஐரோப்பிய ஒன்றித்துக்குள் செல்ல முயன்ற அகதிகளை எட்டி உதைத்த ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் விடுதலை

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண் ஒளிப்பதிவாளர், அகதிகளை எட்டி உதைக்கும் காட்சியானது சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. தேச எல்லைகளை கடந்து அவரது செயலுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன.

காணொளிக் குறிப்பு,

குடியேறிகளை எட்டி உதைக்கும் ஹங்கேரி பெண் செய்தியாளர் காணொளி

இது தொடர்பாக நடந்த வழக்கில் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது ஹங்கேரி உச்ச நீதிமன்றம்.

நன்னடத்தை தண்டனை

பெட்ரா லாஸ்லோவுக்கு மூன்றாண்டுகால நன்னடத்தை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தது கீழ்நீதிமன்றம்.

மேல் முறையீட்டில்,பெட்ரோவின் செயல் எந்த குற்றங்களையும் விளைவிக்கவில்லை அதனால், இதனை கிரிமினல் குற்றமாக கருதமுடியாது என கூறி அவரை விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆனால் அதே நேரம், அவரது செயல், "ஒழுக்கம் தவறிய மற்றும் சட்டவிரோத" செயல் என்று கூறி உள்ளது நீதிமன்றம்.

அகதிகளின் காலம்

இவர் ஹங்கேரிய வலதுசாரி தொலைக்காட்சியான என்1டிவியில் பணியாற்றி வந்தார்.

2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மத்திய கிழக்கு மக்கள் புகலிடம் தேடி ஹங்கேரி வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்தனர்.

மகனை சுமந்து கொண்டு ஒரு தந்தை உள்நுழைய முயன்ற போது, அவர்களை எட்டி உதைத்தார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :