ரஷ்யா யுக்ரேன் மோதலுக்கு காரணம் என்ன? - 300 வார்த்தைகளில்

கைப்பற்றப்பட்ட 3 கப்பல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்ய எல்லை பாதுகாப்பு படையினரால் க்ரைமியா கடற்பரப்பில் இருந்த 3 யுக்ரேனிய கடற்படை கப்பல்களை கைப்பற்றியதுதான், ரஷ்ய-யுக்ரேன் மோதல் அதிகரிக்க முக்கிய காரணம்.

ஏன் நடைபெற்றது?

ஞாயிற்றுக்கிழமை 2 யுக்ரேனிய பீரங்கி கப்பல்களும், கப்பலை இழுத்து கரைக்கு கொண்டு வரும் கப்பலும் கெட்ச் ஜலசந்தியில் பயணித்தன. கருங்கடலில் இருந்து அஸாஃவ் கடலில் நுழைவதற்கு இருக்கின்ற ஒரே வழி கேட்ச் ஜலசந்தி.

ரஷ்ய தேசிய பாதுகாப்பு படை இந்த கடற்பரப்பின் ஒரு பகுதியை தற்காலிகமாக மூடிவிட்ட பின்னர், ரஷ்ய கடல் எல்லையை மீறி இந்த கப்பல்கள் நுழைத்துள்ளதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கப்பல்கள் சுதந்திரமாக செல்கின்ற கருங்கடலில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாலும், ரஷ்யாவால் இணைத்து கொள்ளப்பட்டுள்ள க்ரைமியா யுக்ரேனை சேர்ந்த்தாகவும் இருப்பதால், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறிய செயல் இதுவென யுக்ரேன் கூறுகிறது.

அஸோஃவ் கடலுக்கும் கெட்ச் ஜலசந்திக்கும் தடையில்லாமல் சென்று வருவதற்கு இருக்கின்ற 2003ம் ஆண்டு ரஷ்ய-யுக்ரேன் ஒப்பந்தத்தையும் யுக்ரேன் சுட்டிக்காட்டுகிறது.

இந்த பிரச்சனையின் தீவிரம் என்ன?

2014ஆம் ஆண்டு யுக்ரேன் தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து கொண்டதிலிருந்து நடந்து வரும் போரில் இது சற்று தீவிரமானது.

கெட்சில் தற்போது ரஷ்யா மூன்று கப்பல்களை கொண்டுள்ளது.

யுக்ரேன் கப்பல்களை கைப்பற்றுவதற்கு முன்பாக ரஷ்யா துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியது. சம்பவ இடத்துக்கு ரஷ்யா தனது ராணுவ விமானத்தையும் அனுப்பியுள்ளது.

யுக்ரேனில் ராணுவச் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யா மற்றும் யுக்ரேனின் வேண்டுதலுக்கு இணங்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு கூட்டம் ஒன்றையும் கூட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

சண்டையை இது எவ்வாறு தீவிரமாக்கும்?

யுக்ரேனின் கிழக்கு பகுதியில் சண்டை தீவிரமடையும் ஆபத்து உள்ளது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளிடம் ரஷ்யாவின் கனரக ஆயுதங்கள் உள்ளன. யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றன. இருதரப்பினரும் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த வருடம் க்ரைமியா விவகாரத்தில் தனது பிடியை இறுக்கும்விதமாக ரஷ்யா கெட்ச் ஜலசந்தியில் பாலம் ஒன்றை கட்டியது.

அசோஃவ் கடலில் யுக்ரேன் கப்பல்களை ரஷ்யா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த பகுதி யுக்ரேன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எஃகு, தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

க்ரைமியாவின் சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இது மேலும் ஆபத்தை அதிகரிக்கும். ஆனால் இப்பகுதி யுக்ரேனுக்கு சொந்தமானது என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்