பிரான்சில் 'மஞ்சள் ஜாக்கெட்' போராட்டம் ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரான்சில் 'மஞ்சள் ஜாக்கெட்' போராட்டம் ஏன்?

  • 4 டிசம்பர் 2018

பிரான்ஸ் முழுவதும் 'மஞ்சள் ஜாக்கெட்' ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது

போராட்டத்துக்கு என்ன காரணம்?

பிரான்ஸ் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோ முதல் 1.53 யூரோ வரை உயர்ந்து, கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம்.

2000களின் தொடக்கத்திலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை.

உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் தெரிவித்தார்.

அது என்ன `மஞ்சள் ஜாக்கெட்` இயக்கம்?

பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும்.

சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்