பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பு ரத்து - தெரீசா மே

British Prime Minister, Theresa May delivers a Brexit statement on Downing Street on November 14, 2018 in London, England - Brexit படத்தின் காப்புரிமை Getty Images

பிரெக்ஸிட் வரைவு குறித்து ஐக்கிய ராஜியத்தில் பிரதிநிதிகள் சபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த சூழ்நிலையில் அதை ரத்து செய்வதாக தெரீசா மே தெரிவித்துள்ளார்.

அந்த வரைவு நிராகரிக்கப்படும் என்பதே அதற்கு காரணம் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் வரைவில் பெரும்பாலான பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தாலும், வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசுக்கு இடையேயான எல்லை தொடர்பான விவகாரத்தில் குழப்பம் நிலவுவதால் நாளைக்கான வாக்கெடுப்பை ரத்து செய்வதாக தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நிகழ்த்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பெரும் குழப்பத்தில் இருப்பதாக தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அனுமதி இல்லாமல் பிரெக்ஸிட் முடிவை பிரிட்டனால் ரத்து செய்ய முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரெக்ஸிட் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்றால், அந்த முடிவினை ஒருதலைபட்சமாக பிரிட்டனால் எடுக்க முடிய வேண்டும் என பிரெக்ஸிட்டிற்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் பிராசாரம் செய்பவர்களின் குழு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் பிரிட்டன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் அதனை எதிர்த்தது.

இந்நிலையில் நாளைய தினம் ஐக்கிய ராஜியத்தியத்தின் நாடாளுமன்ற மக்கள் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட இருந்த நிலையில் அதை ரத்து செய்வதாக தெரீசா மே தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்துவிட்டு பின்னர், சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் ஒன்றியத்துக்கும் ஒப்பந்தம் ஏற்படும் வரையில் அல்லது ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்தபின்னர் இருக்கக்கூடிய இரண்டு ஆண்டு கால அறிவிக்கை காலத்திற்குள் தமது யோசனையை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் இரண்டு ஆண்டுகாலம் என்பது நீட்டிக்கப்பட்டால், உறுப்பினர் நாடானது நீட்டிக்கப்ட்ட காலகட்டத்தில் கூட தமது முடிவை மாற்றிக்கொள்ள முடியும் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்