கர்நாடக கோயில் மரணங்கள் மற்றும் பல்வேறு செய்திகள்

படத்தின் காப்புரிமை ANURAG BASAVARAJ
Image caption மராம்மா கோயில்

கர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி

படத்தின் காப்புரிமை ROBERTO MACHADO NOA / GETTY

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கோயிலில் நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

விரிவாகப் படிக்க:கர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி

இனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை

ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.

விரிவாகப் படிக்க: இனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை

'பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ'

படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வார் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

விரிவாகப் படிக்க: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ - நாமல் பரபரப்பு அறிவிப்பு

கமல்நாத்தை துரத்தும் சீக்கிய கலவர சர்ச்சைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐம்பதாண்டு அரசியல் அனுபவம் கொண்ட கமல்நாத் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் மற்றும் எமர்ஜென்சி காலகட்டத்தில் அவரது பங்களிப்பு என சர்ச்சைகளின் நிழல் கமல்நாத்தை விட்டு விலகவில்லை.

அகாலிகளுக்கு எதிராக ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேவை உருவாக்கியதில் கமல்நாத்தின் பங்கு தொடர்பாகவும் பல சர்ச்சைகள் நிலவுகின்றன.

விரிவாகப் படிக்க: மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்கும் கமல்நாத்தை துரத்தும் சர்ச்சைகள்

தேர்தல் முடிவுகள் தமிழக கூட்டணி கணக்குகளை மாற்றுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக கூட்டணிக் கணக்குகளில் இந்தத் தேர்தல் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஐந்து மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சுயேச்சைகள், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் இந்தத் தேர்தலில் வெகுவாக அதிகரித்திருப்பது அக்கட்சிக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

விரிவாகப் படிக்க:ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழக கூட்டணி கணக்குகளை மாற்றுமா?