பருவநிலை மாற்றம்: வெப்பமயமாவதில் இருந்து புவியைக் காக்க உலக நாடுகளின் கடைசி முயற்சி

பருவநிலை படத்தின் காப்புரிமை Getty Images

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர்.

முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பிரநிதிகள் நம்புகின்றனர்.

அதிகரித்து வரும் புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் குறைக்க வேண்டும் என்பதே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும். அதற்கு, தற்போது போலாந்தின் கேடோவைஸ் நகரில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானங்கள் உதவிகரமாக இருக்கும்.

"பாரிஸ் உடன்படிக்கையை ஒன்றிணைத்து செயல்படுத்துவது என்பது மிகப்பெரிய பொறுப்பு" என்கிறார் COP24 எனப்படும் பேச்சுவார்த்தை கூட்டத்தின் தலைவர் மீகல் குர்டைகா.

ஏழை நாடுகளுக்கு ஏற்றார்போல வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்பதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பொதுவான விதிமுறை.

வளரும்நாடுகள் அதிகரித்துவரும் வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அங்கீகாரமும், பண உதவியும் எதிர்பார்க்கின்றன.

பருவநிலை மாற்றத்திற்கு காரணம் தாங்கள்தான் என்று சட்டபூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தை பணக்கார உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

எதிர்காலத்தில் அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் நீண்ட காலமாகவே அந்நாடுகள் உள்ளன.

படத்தின் காப்புரிமை பருவநிலை மாற்றம் - போலாந்தில் கூடிய பிரநிதிகள் கவல

கடந்த வாரயிறுதியில், உலகாளவிய தட்பவெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள்ளாக வைத்திருப்பது குறித்த ஐ.நா சமீபத்திய அறிக்கையை அனுமதிக்கக்கோரும் ஒரு கூட்டத்தை அமெரிக்கா, செளதி அரேபியா, ரஷ்யா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு விஞ்ஞானிகளும், ஐ.நா பிரநிதிகளும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

கார்பன் வெளியேற்றத்தை வேகமாக கட்டுப்படுத்த முடியுமா?

முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இந்த கார்பன் வெளியேற்ற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை உலக நாடுகள் விரைவாக எட்டவேண்டும் என்ற நிலையை காண கூட்டத்திற்கு வந்த பேச்சுவார்த்தையாளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, உலக நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் 'முற்றிலும் போதாது' என்று கூட்டத்திற்கு வந்திருந்த ஒருநாட்டின் பிரதிநிதி கவலை தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: