நேபாளத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து: 23 பேர் பலி

பட மூலாதாரம், AFP
நேபாளத்தில் மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் சென்ற பேருந்து ஒன்று 700 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 23 பேர் பலியாகினர்.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் 14 காயமடைந்தனர்.
தாவரவியல் கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த விபத்தில் இரண்டு ஆசிரியர்களும், ஓட்டுநரும் பலியாகினர்.
இந்த விபத்துக்கு காரணம் அதிவேகமாக பயணம் செய்ததே என்று போலிஸ் செய்தி தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்தில் 37 பேர் பயணம் செய்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், டாங்க் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா சென் இச்சக் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஒரு விவசாய நிலத்தை பார்வையிட்டு திரும்பி கொண்டிருந்தபோது, ராம்ரி கிராமம் அருகில் பேருந்து சாலையிலிருந்து இடரி பள்ளத்தில் விழுந்தது.
நேபாளத்தில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழக்கூடியவையே. மோசமான சாலைகள், சரியாக கவனிக்கப்படாத வாகனங்கள் மற்றும் பொறுப்பில்லாது வாகனம் ஓட்டுவதே அதற்கு காரணம்.
கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றி வந்த லாரி ஒன்று நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்