செவ்வாய் கிரகத்தின் பனிப்பள்ளம் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை ESA

செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும்.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாகப் படிக்க - செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

இலங்கை வடக்கு மாகாணத்தில் வெள்ளம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 2,788 குடும்பங்களை சேர்ந்த 9,161 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

மேலும், 1,829 குடும்பங்களை சேர்ந்த 5,775 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முதல் பெய்துவரும் அடை மழையினால் இலங்கையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனினும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

விரிவாகப் படிக்க - இலங்கை வடக்கு மாகாணத்தில் வெள்ளம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வு

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசின் பாலினம் மாறிய நபர்கள் மீதான உரிமை பாதுகாப்பு மசோதா எதிர்க்கப்படுவது ஏன்?

இந்திய அரசு மீது நாடு முழுதும் உள்ள பாலினம் மாறிய நபர்கள் கோபத்தில் உள்ளனர். அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாலினம் மாறிய நபர்கள் (உரிமை பாதுகாப்பு) மசோதாவை அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த மசோதாவின் பல பகுதிகள் தங்களுக்கு எதிராக உள்ளதாக பாலினம் மாறியோர் நினைக்கின்றனர். இந்த மசோதாவில் என்ன இருக்கிறது? ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்?

விரிவாகப் படிக்க - "நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா?" - மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்கும் பாலினம் மாறியோர்

தன் இறுதிச் சடங்குக்குத் தேவையான பொருளை வாங்கிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கம்பதுரு மண்டல் பகுதியில் ராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவய்யாவின் தந்தை மல்லப்பா ஒரு விவசாயி. தனது இறுதிச் சடங்கு நடத்துவதற்குத் தேவையான, எல்லா பொருள்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன் புகைப்படத்தையும் லேமினேட் செய்து வைத்திருந்தார்.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2018 ஆகஸ்ட் மாதம் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இறந்த பிறகு தன்னுடைய இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சுமையை குடும்பத்தினருக்கு தரக்கூடாது என்பதற்காக, அதற்கு வேண்டிய பொருள்களை வாங்கி வைத்திருந்தார் என்றும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்

விரிவாக படிக்க - தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவிலிருந்து தேயிலை சாகுபடியை ஆங்கிலேயர்கள் திருடியது எப்படி?

உலகிலேயே தண்ணீருக்கு பிறகு அதிகம் அருந்தப்படுவது தேநீர்தான் என்றும் உலகில் இரண்டு மில்லியன் மக்கள் தினசரி காலை எழுந்தவுடன் தேநீர் குடிக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

வீட்டிலோ அல்லது பணம் கொடுத்தால் கடையிலோ ஒரு கப் தேநீர் கிடைத்துவிடும் என்றுதானே தோன்றுகிறது? அதேபோல பொதுவாக தேநீர் அருந்துபவர்களுக்கு, அது நமது கைக்கு கிடைப்பது எப்படி என்ற கேள்வி எழுவதில்லை.

ஆனால் உண்மையில் தேநீரின் கதை ஒரு மர்ம நாவலைப் போன்று சுவாரசியமானது. சாகசங்களும், அதிர்ஷ்டமான தருணங்களும், துரதிருஷ்டவசமான சம்பவங்களும் கலந்த ஒரு துப்பறியும் கதைக்கு ஒப்பானது தேநீர் உலகம் முழுவது பரவிய பின்னணிக் கதை.

விரிவாகப் படிக்க - சீனாவிலிருந்து தேயிலை சாகுபடியை ஆங்கிலேயர்கள் திருடியது கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: