கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: "நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுமியிடம் வினவிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
பின்லாந்து
யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுமியிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செயல்படும் சாண்டாக்களின் இருப்பிடங்களை பதிவுசெய்து வரும் அமெரிக்க அரசு துறையான நோராடை, டிரம்பை தொடர்புகொள்வதன் மூலம் அடைய முடியும் என்ற எண்ணத்தில் அந்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
பட மூலாதாரம், Reuters
வெள்ளை மாளிகைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பதிலளித்தனர்.
அப்போது நடந்த சில சுவாரசியமான உரையாடல்கள்:
கோல்மன் என்ற சிறுமியிடம் பேசிய டிரம்ப், "ஹலோ, இது கோல்மனா? இனிய கிறிஸ்துமஸ். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு எத்தனை வயதாகிறது? நன்றாக படிக்கிறாயா? நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு, கோல்மனின் பதில் தெளிவாக இல்லை.
சாண்டாவின் இருப்பு சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில் டிரம்ப் ஏன் இதுபோன்ற கேள்வியை எழுப்பினார் என்று பலரும் அந்த உரையாடல் தொடர்பான காணொளியுடன் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை கீழ்க்காணும் புகைப்படங்களில் காணலாம்.
பட மூலாதாரம், Getty Images
மெக்ஸிகோ
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா
இந்நிலையில், டிரம்ப் மற்றும் மெலானியாவின் மற்ற உரையாடல்கள் எவ்வித சர்ச்சையுமின்றி வாழ்த்துக்களுடன் முடிவுற்றன.
"உங்களது கனவுகள் மெய்ப்படும் என்று நம்புகிறேன்" என்று மற்றொரு சிறுவனிடம் பேசிய மெலானியா கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்