ரோஹிஞ்சா அகதிகள் இந்துக்கள் சடலத்தை உண்பது குறித்த கள ஆய்வு மற்றும் பிற செய்திகள்

ரோஹிஞ்சா அகதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

ரோஹிஞ்சா அகதிகள் இந்துக்களின் சடலத்தை உண்பது உண்மையா?

மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. 'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன.

ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

'அரசு எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், ஹரியானாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்துக்களின் மாமிசத்தை உண்பவர்கள் மேவாரில் தங்கியுள்ளனர்' என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது.

பட மூலாதாரம், Paul Kane - CA

கோலியின் படை சரித்திரம் படைக்குமா?

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த வேலை தினத்தை பாக்சிங் டே என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பொதுவாக டிசம்பர் 26-ம் தேதி ஒரு டெஸ்ட் போட்டி நடக்கும். இந்த டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் என்கிறார்கள்.

இம்முறை பாக்சிங் டே டெஸ்டில் ஆறு அணிகள் விளையாடுகின்றன. சென்சூரியனில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்காவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இலங்கையும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இதுவரை ஏழு முறை ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் டிரா ஆனது. ஆனால் மற்ற ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வெற்றியைச் சுவைத்தது.

பட மூலாதாரம், UNIVERSAL HISTORY ARCHIVE

கிறிஸ்துமஸ் பண்டிகை தடை செய்யப்பட்ட கதை

அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள்.

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள்.

1964-ம் ஆண்டு ஆங்கிலேய கிறித்துவ தூய்மைவாதிகள் கிறிஸ்துமஸை ஒழிக்க முடிவு செய்தார்கள். ப்ரொட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் கடுமையான மத விதிகளின் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

கிறித்துவ தூய்மைவாத அரசு கிறிஸ்துமஸை ஒரு 'பாகன்'பண்டிகையாக கருதியது. ஏனெனில் டிசம்பர் 25-ம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் விளக்கம் இல்லை என்றார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹெச்.டி.குமாரசாமி

கேமராவில் சிக்கிய கர்நாடக முதலமைச்சர்

தமது கட்சிக்காரர் ஒருவரை கொலை செய்த நபர்களை இரக்கமின்றி சுட்டுத்தள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய காட்சி, கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களிலும் வைரலாகப் பரவியது.

இது சர்ச்சையானதை அடுத்து குமாரசாமி தமது பேச்சு குறித்து விளக்கம் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தன் தடாலடிப் பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் குமாரசாமியின் இந்த சமீபத்திய பேச்சின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

முன்னதாக உயிரிழந்த எட்டுவயது சிறுமி ஜாக்குலின் படத்துடன் அவரது சகோதரர்

அமெரிக்க எல்லையில் மீண்டும் ஒரு குழந்தை உயிரிழப்பு

அமெரிக்க எல்லையை நோக்கி படையெடுத்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில், அந்நாட்டு அரசின் தடுப்புக் காவலில் இருந்த கௌதமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மெக்ஸிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குடியேறிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு முன்பு அதே குவாட்டமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமியொருவர் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் உயிரிழந்த சிறுமி தனது குடும்பத்தினருடன் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முயற்சித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: